சிட்னி : இந்திய -ஆஸ்திரேலிய தொடர்களில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர்கள் சிட்னியில் குவாரன்டைனில் உள்ளனர். பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரர் பிரித்வி ஷாவுடன் ஷிகர் தவான் குத்தாட்டம் போட்ட வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பாலிவுட்டின் பழைய லைலா என்னை பைத்தியமாக்குகிறாள் என்ற இந்தி பாடலுக்கு இருவரும் ஆட்டம் போட்டனர்.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஐபிஎல் 2020 சீசனில் விளையாடிய ஷிகர் தவான், இந்த சீசனில் அதிக ரன்களை எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த சீசனில் இரண்டு அடுத்தடுத்த சதங்கள் உட்பட அவர் அடித்த ரன்கள் 618. தற்போது ஆஸ்திரேலிய தொடருக்காக அவர் சிட்னியில் குவாரன்டைனில் உள்ளார்.
தொடர்களுக்கான பயிற்சியிலும் ஈடுபட்டுள்ள தவான், துவக்க வீரர் பிரித்வி ஷாவுடன் இணைந்து பாலிவுட் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். தன்னுடைய சட்டையை கழற்றி அவர் இந்த பாடலுக்கு ஆட்டம் போட்டார். இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட தவான், பிரித்வி ஷாவிற்கு டேக் செய்துள்ளார்.
வரும் 27ம் தேதி இந்திய -ஆஸ்திரேலிய தொடர் ஒருநாள் போட்டியுடன் துவங்கவுள்ள நிலையில், தங்களின் நெருக்கடிகளை இவ்வாறு போக்கி வருகின்றனர் இந்திய வீரர்கள்.