டி20ல் வரலாற்று பார்ட்னர்ஷிப்... ஹெட்மெயர் - பிராவோ காட்டடி.. படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலியா!
லூசியா: பிராவோ- ஹெட்மெயர் ஆகியோரின் அசத்தல் பார்ட்னர்ஷிப்பால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அபார வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில் 2வது போட்டி நேற்று நடைபெற்றது.
முதலில் பேட் செய்த வெஸ்டீ இண்டீஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 140 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்கம் சற்று சரிவாக இருந்தது. ஓப்பனிங் வீரர் ஃபளச்ர் 9 ரன்களும், அடுத்து களமிறங்கிய கிறிஸ் கெயில் 13 ரன்கள் எடுத்தும் வெளியேறினர். அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை, டுவைன் பிராவோ, சிம்ரோன் ஹெட்மையர் ஜோடி அதிரடியாக மீட்டனர்.
4ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இவர்கள் 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தது. இதன்மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 4ஆவது விக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பார்ட்னர்ஷிப்பாக இது இடம் பெற்றுள்ளது. அதிரடியாக விளையாடிய ஹெட்மையர் 61 ரன்களும், டுவைன் பிராவோ ஆகியோர் 47 ரன்கள் சேர்த்தார்கள். இதனால், 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்களை குவித்தது.
197 என்ற கடின இலக்கை துறத்திய ஆஸ்திரேலிய அணி இந்த முறையும் படு சொதப்பில் ஈடுபட்டது. அணியின் ஓப்பனர்களாக களமிறங்கிய மேத்யூ வேட் (0), ஆரோன் ஃபிஞ்ச் (6) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். பின்னர் வந்த ஹென்ரிக்யூஸ், டேன் கிறிஸ்டியன், உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். மிட்செல் மார்ஷ் மட்டும் சிறப்பாக விளையாடி 54 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் ரன்களை குவிக்கவில்லை. இதனால், ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 140 ரன்கள் மட்டும் அடித்து, 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.


Click it and Unblock the Notifications