Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிவம் துபே மாற்றப்பட்ட விவகாரம்..போட்டி நடுவர் ஸ்ரீநாத் லஞ்சம் வாங்கினாரா?பிரபல போட்டி நடுவர் புகார்

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றியை பெற்றது. இந்த சூழ்நிலையில் நான்காவது டி20 போட்டியில் மிகப்பெரிய சர்ச்சை ஒன்று வெடித்தது.

அதில் இந்திய அணியின் ஆல் ரவுண்டரான சிவம் துபே பேட்டிங் மற்றும் விளையாடிவிட்டு பந்து வீச்சு செய்யாமல் தமக்கு கண்கஷன் ஏற்பட்டு விட்டதாக கூறி சென்றுவிட்டார். இதன் காரணமாக அவருக்கு பதில் ஒரு ஆல்ரவுண்டர் வீரர் தான் களமிறங்கி இருக்க வேண்டும்.

shivam dube chris broad srinath


ஆனால் இந்திய அணி நிர்வாகம் ஹர்ஷித் ராணா என்ற வேகப்பந்துவீச்சாளரை களம் இறக்கியது. இது ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஹர்ஷித் ரான மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணி அதில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஹர்ஷித் ரானா அனுமதிக்கப்பட்டதற்கு போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத் தான் காரணம் என்று பல விமர்சனமும் இருந்தது.

இங்கிலாந்து வீரர்கள் மட்டுமல்லாமல் இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் ஸ்ரீநாத் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், நான்காவது டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதை ஸ்ரீநாத்துக்கு தான் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஜவஹல் ஸ்ரீநாத் லஞ்சம் வாங்கி விட்டதாக முன்னாள் போட்டியின் நடுவர் கிரிஷ் பிராட் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் பிராட்டின் தந்தை நான் கிறிஸ் பிராட் ஆவார். இவர் இதுவரை 622 சர்வதேச போட்டி நடுவராக செயல்பட்டு இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "இது போன்ற இருதரப்பு தொடரில் இனி நடுநிலையான போட்டி நடுவர்களை தான் நியமிக்க வேண்டும்".

"அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் ஐசிசி தற்போது தன்னுடைய பழைய கெட்ட நாட்களுக்கு செல்கிறது. லஞ்சமும் ஊழலும் நடுநிலை தவறிய விஷயங்களும் தற்போது நடைபெறுகிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த விஷயத்திற்கு கெவின் பீட்டர்சன் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்.

அதற்கு பதில் அளித்துள்ள கிறிஸ் பிராட், "பீட்டர்சனில் இந்த கருத்துக்கு நான் முழு ஆதரவு வழங்கினேன் சிவன் டுபுக்கு பதில் ஹர்ஷித்ரானா மாற்று வீரராக வர போட்டி நடுவர் அனுமதி அளித்தது மிகவும் தவறான விஷயம். அதுவும் அவர் இந்தியாவை சேர்ந்தவர். இதுபோன்ற நடுநிலைத் தவறி விஷயங்களை ஒழிக்க வேண்டும் என்றால் ஐசிசி நடுநிலை போட்டி நடுவர்களை நியமிக்க வேண்டும்" என்று வலியுறுத்தி இருந்தார்.

Story first published: Monday, February 3, 2025, 16:18 [IST]
Other articles published on Feb 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+