பிரஷர்னு வந்துட்டா நான்தான்.. ஒரே ஓவரில் ஹீரோவான சிவம் துபே.. பவுலிங்கில் மேஜிக் செய்த ஆல்ரவுண்டர்!
நிஷின்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய போட்டிகள் இறுதிச் சுற்றில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சிவம் துபே அமைந்துள்ளார். பேட்டிங்கில் 15 பந்துகளில் 27 ரன்களை விளாசிய சிவம் துபே, பவுலிங்கில் 3 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
ஏசியன் கேம்ஸ் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக தொடர்ந்து 2வது முறையாக ஏசியன் கேம்ஸில் தங்கப் பதக்கம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்களை எடுத்தது.

இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக ஆடிய ஹசன் நவாஸ் 51 பந்துகளில் 7 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 96 ரன்கள் எடுத்து அசத்தினார். பாகிஸ்தான் அணி தரப்பில் ஒரே வீரராக ஹசன் நவாஸ் போராடியது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
அதேபோல் இந்தப் போட்டியின் ஹீரோவாக சிவம் துபே மாறி இருக்கிறார். பேட்டிங்கில் 15 பந்துகளில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 27 ரன்களை கடைசி நேரத்தில் விளாசிய சிவம் துபே, பவுலிங்கில் யாரும் எதிர்பாராத வகையில் பார்ட்னர்ஷிப்பை பிரேக் செய்தார். பாகிஸ்தான் அணியின் ஹசன் நவாஸ் - சயீம் அயூப் கூட்டணி நீண்ட நேரமாக களத்தில் இருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் கைகள் ஓங்கிய போது, 15வது ஓவரில் அட்டாக்கில் வந்த சிவம் துபே முதல் ஓவரிலேயே சயீம் அயூப் விக்கெட்டை வீழ்த்தி கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 33 ரன்கள் தேவையாக இருந்த போது, கொஞ்சம் கூட பதற்றம் இல்லாமல் 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து அசத்தினார்.
ஹர்திக் பாண்டியா இல்லாத போட்டிகளில் எல்லாம் சிவம் துபே பவுலிங்கில் மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப் பிரேக்கராக இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் பாகிஸ்தான் அணியின் இந்த போராட்டம் ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களுக்கு பின் நிறைவான ஒரு இந்தியா -பாகிஸ்தான் ஆட்டத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications
