Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே-வில் பந்துவீச வாய்ப்பு தரலை.. அதிருப்தியில் வெளியேற முடிவு செய்த சிவம் துபே.. பின்னணி தகவல்

சென்னை: 2027 ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சிவம் துபே அணியை விட்டு வெளியேறத் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பத்திரிகையாளர் ரோஹித் ஜுக்லான் இதுபற்றி பகிர்ந்துள்ளார். அதில் சிஎஸ்கே அணியில் தன்னைச் ஆல் ரவுண்டராக சரியாக பயன்படுத்தவில்லை என்ற அதிருப்தியில் சிவம் துபே உள்ளார் என கூறப்பட்டுள்ளது

ஆல்-ரவுண்டரான சிவம் துபேவுக்கு கடந்த 3 ஐபிஎல் சீசன்களில் வெறும் 9 ஓவர்கள் மட்டுமே பந்துவீச வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் அவர் 2 விக்கெட்டுகளை எடுத்தார். மேலும், இம்பாக்ட் பிளேயர் விதியால் அவரது பேட்டிங் வாய்ப்பும் குறைந்துள்ளது. கடந்த 2024ல் 396 ரன்கள் எடுத்த அவர், 2025ல் 357 ரன்களும், 2026ல் வெறும் 270 ரன்களும் மட்டுமே எடுத்துள்ளார்.

Shivam Dube to exit CSK ahead of IPL 2027 as he was frustrated over lack of bowling opportunities

இதனால், தனது ஆல்ரவுண்ட் திறமையை முழுமையாக நிரூபிக்க புதிய அணியைத் தேடி அவர் சிஎஸ்கே-விலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார். மறுபுறம், சிஎஸ்கே அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ உள்ளது. 2024 முதல் 2026 வரை தொடர்ந்து 3 சீசன்களாக சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறத் தவறியதால், புதிய உத்திகளுடன் களமிறங்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டு தலைமைப் பயிற்சியாளர் ஒருவரை நியமிக்க சிஎஸ்கே ஆலோசித்து வருகிறது.

முன்னாள் கேப்டன் தோனியின் எதிர்காலமும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அவர் வீரராகவோ, பயிற்சியாளராகவோ அல்லது அணியில் விளையாடாமலோ இருக்கவும் வாய்ப்புள்ளது. மேலும், முன்பு போல இல்லாமல், தற்போதைய முக்கிய முடிவுகளை தோனியின் ஒப்புதல் இன்றி சிஎஸ்கே நிர்வாகமே நேரடியாக எடுக்கத் தொடங்கியுள்ளது. 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் தோனியின் தலைமையில் 5 முறை கோப்பை வென்ற சிஎஸ்கே, இப்போது முற்றிலும் புதியதொரு அணியாக மாறி உள்ளதும் சிவம் துபே சிஎஸ்கே அணியை விட்டு விலகும் முடிவை எடுக்க ஒரு காரணமாக கூறப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸில் இருந்து விலகும் மற்றொரு டாப் வீரர்.. 2027 ஐபிஎல் தொடருக்கு முன் மாற்றம் உறுதி

மும்பை இந்தியன்ஸில் இருந்து விலகும் மற்றொரு டாப் வீரர்.. 2027 ஐபிஎல் தொடருக்கு முன் மாற்றம் உறுதி

எனினும், சிவம் துபே சிஎஸ்கே அணியை விட்டு விலகுவது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை. அவர் வேறு அணிக்கு டிரேட் மூலம் செல்வாரா? அல்லது ஏலத்தை சந்திப்பாரா? அல்லது கடைசி நிமிடத்தில் சிஎஸ்கே அணியிலேயே இருக்க முடிவு செய்வாரா? என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.

Story first published: Friday, August 7, 2026, 19:06 [IST]
Other articles published on Aug 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+