3 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன ஷிகர் தவான்.. ரிஷப் பண்டிற்கு அறிவுரை.. இது தான் காரணமா ?
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் கார் ஓட்டுவது தொடர்பாக ஷிகர் தவான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ரிஷப் பண்டிற்கு அறிவுரை கூறிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய அணி வீரர்கள் ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருவதால் அவர்கள் வீட்டில் இருப்பதை விட அணியாக ஒரே குடும்பமாக இருப்பது தான் அதிகம்.
இதனால் ஒவ்வொரு வீரர்களின் குறை நிறை என்னவென்று மற்ற வீரர்களுக்கு நன்கு தெரியும்.

3 ஆண்டுக்கு முன்
இதனால் அணியில் இருக்கும் ஜூனியர் ஏதாவது தவறு செய்தால் சீனியர்கள் அவர்களை அழைத்து அறிவுரை சொல்வது வழக்கம். இப்படிதான் ரிஷப் பண்டிற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஷிகர் தவான் ஒரு அறிவுரையை கூறி இருந்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக பண்ட், ஷிகர் தவான் விளையாடிய போது ஒரு நேர்காணல் நடந்திருக்கிறது.

ஷிகர் தவான் அறிவுரை
அதில் தவானை ரிஷப் பன்ட் பேட்டி எடுத்தார். இதில் ஒரு கேள்வியாக எனக்கு ஏதாவது அறிவுரை சொல்ல வேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள் என்று ரிஷப் பண்ட் கேட்டார். அதற்கு பதில் அளித்த ஷிகர் தவான், கார் ஓட்டும் போது ஒழுங்காக இரு.கவனம் தேவை என்று பதிலளித்துள்ளார்.இதை கேட்டவுடன் வெட்கத்தில் சிரித்த ரிஷப் பண்ட், நிச்சயமாக இந்த அறிவுரையை நான் ஏற்றுக் கொள்கிறேன். இனி நான் காரை கவனத்துடன் இயக்குவேன் என்று உறுதி அளித்தார்.

தவிர்த்திருக்கலாம்
எனவே ரிஷப் பன்ட் காரை வேகமாக ஓட்டும் பழக்கம் உடையவர் என்று இந்த வீடியோ மூலம் தற்போது தெரியவந்துள்ளது. கார் ஓட்டும் முறை குறித்து தவான் அப்போதே கூறியிருக்கிறார். இதனை ரிஷப் பண்ட் கேட்டிருந்தால், இப்படி ஒரு நிலை அவருக்கு ஏற்பட்டிருக்காது. எனவே பெரியவர்கள் சொல்லும் நல்ல விஷயங்களை நாம் கேட்டு நடந்து கொள்வது மிகவும் முக்கியம்.

ரசிகர்கள் ஆதங்கம்
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த வீடியோவை தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அதிக அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் பண்ட் கார் ஓட்டும் போது கவன குறைவாக இருப்பார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ரிஷபன்ட் தூங்கிக் கொண்டுதான் வண்டி ஓட்டினாரா இல்லை வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இனியாவது நாம் வாகனம் ஓட்டும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications