Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாக்.குக்கு அடிமேல் அடி-பந்தை சுரண்டி, மிதித்து சிக்கினார் சோயப் அக்தர்

 Shoaib Akhtar
லண்டன்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு நேரம் சரியில்லை போலும். அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. லேட்டஸ்டாக பந்தை சுரண்டியும், மிதித்தும் பந்தை சேதப்படுத்தியதாக பந்து வீச்சாளர் சோயப் அக்தர் சிக்கியுள்ளார்.

ஸ்பாட் பிக்ஸிங், மேட்ச் பிக்ஸிங் என தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி பெருமளவில் நாறிப் போயுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. இந்த நிலையில் புதிய தலைவலி சோயப் அக்தர் ரூபத்தில் வந்துள்ளது.

இங்கிலாந்துக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே செளதாம்ப்டன் நகரில் 5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடந்தது. இதில் பாகிஸ்தான் அணி 121 ரன் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது. இதன் மூலம் 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரை வென்றது.

இந்தப் போட்டியின்போது பந்து வீசிய அக்தர் பந்தை சுரண்டியதும், காலில் போட்டு மிதித்ததும் கேமராவில் பதிவாகியுள்ளது.

பந்தை இடது கையால் சோயப் சுரண்டுவது கேமராவில் பதிவாகியுள்ளது. அதேபோல கீழே கிடந்த பந்து நைஸாக தனது பூட்டால் அவர் மிதித்து சேதப்படுத்துவதும் பதிவாகியுள்ளது.

இது நடந்தது 41வது ஓவரின்போது என டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+