Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

17 வயது சிறுமியை திருமணம் செய்யப் போகிறேனா?.. சோயப் மறுப்பு

கராச்சி: 17 வயது சிறுமியை தான் திருமணம் செய்யப் போவதாக வெளியாகியுள்ள செய்திகளை பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் சோயப் அக்தர் மறுத்துள்ளார்.

இது அபத்தமான, வதந்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இப்படி ஒரு திருமணமே திட்டமிடப்படவில்லை என்றும் இதில் உண்மை இல்லை என்றும் அவர் விளக்கியுள்ளார்.

தயவு செய்து மீடியாக்கள் இதுபோல வதந்திகளைப் பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

39 வயது அக்தர்

39 வயது அக்தர்

39 வயதாகும் அக்தர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப் பந்து வீச்சாளராக ஒரு காலத்தில் ஜொலித்தவர். இப்போது அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டு விட்டார்.

அப்போதாபாத்திலிருந்து 17 வயது சிறுமியை

அப்போதாபாத்திலிருந்து 17 வயது சிறுமியை

இந்தநிலையில் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட அப்போதாபாத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அக்தருக்கும் திருமணம் செய்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.

ஜூன் 22ம் தேதி

ஜூன் 22ம் தேதி

அதாவது ஜூன் 22ம் தேதியன்று, அக்தருக்கும், 17 வயது சிறுமியான ரூபாப்-புக்கும் இடையே ராவல்பிண்டியில் திருமணம் நடைபெறப் போவதாக அந்த செய்திகள் கூறின. இதனால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டது.

கொந்தளித்த சோயப்

கொந்தளித்த சோயப்

ஆனால் இது அப்பட்டமான வதந்தி என்று பதிலளித்துள்ளார் சோயப் அக்தர், சற்று கோபத்துடன்.

டிவிட்டரில் கொதிப்பு

டிவிட்டரில் கொதிப்பு

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து அவர் டிவிட் செய்துள்ளார்.

நான் திருமணம் செய்யவில்லை

நான் திருமணம் செய்யவில்லை

17 வயது சிறுமியை நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை முதலில் உறுதிப்படுத்த விரும்புகிறேன். இது அப்பட்டமான பொய்ச் செய்தி. அதில் உண்மை இல்லை.

வதந்தி பரப்புவது தவறு

வதந்தி பரப்புவது தவறு

தேவையில்லாமல் இப்படி வதந்தி பரப்புவது வரவேற்புக்குரியது அல்ல. எனது பத்திரிக்கை நண்பர்கள், பொறுப்புடன் செயல்பட வேண்டும். இப்படி வதந்திகளைப் பரப்பக் கூடாது. நன்றி.. என்று சோயப் கூறியுள்ளார் தனது டிவிட்கள் மூலமாக.

Story first published: Sunday, June 8, 2014, 15:26 [IST]
Other articles published on Jun 8, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+