For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாக். கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை சாடுகிறார் சோயிப் அக்தர்

By Mathi

கராச்சி: தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இருந்து ஆல்ரவுண்டர்களான அப்துல் ரசாக், சோயிப் மாலிக் திடீரென நீக்கப்பட்டிருப்பதற்கு அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கடும் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

அப்துல் ரசாக், சோயிப் மாலிக் இருவரும் உடற்தகுதி இல்லாததால் நீக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.

Shoaib Akhtar lashes out at PCB chief Sethi

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சோயிப் அக்தர், இது நல்ல ஜோக். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு இந்த இரு வீரர்களும் செல்லும் போது உடற்தகுதி சரியானதாக இருந்ததா?

இப்போது திடீரென நாடு திரும்புமாறு அவர்களை கூறக் காரணம் என்ன? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரான சேதியின் செயல்பாடு மிகவும் மோசமாக கவலைக்குரியதாக இருக்கிறது. அதேபோல் ஒரு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திடீரென டிவி தொகுப்பாளராக மாறி அவர் சார்ந்த அணியின் கேப்டனை சராமரியாக கேள்வி கேட்பது என்பதை இதுவரை நான் கேள்விபட்டதும் இல்லை பார்த்ததும் இல்லை என்றார்.

Story first published: Wednesday, November 20, 2013, 12:45 [IST]
Other articles published on Nov 20, 2013
English summary
Pakistan fast bowler Shoaib Akhtar on Tuesday (November 19) lashed out at PCB chief Najam Sethi saying cricket in the country has further deteriorated under him, after a sudden withdrawal of allrounders Abdul Razzaq and Shoaib Malik from the South African tour due to fitness problems.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X