Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சோலி முடிஞ்சுடுச்சு.. ஏன் இன்னும் இழுத்துக்கிட்டே இருக்காரு.. மூத்த இந்திய வீரர் பற்றி அக்தர் அதிரடி

இஸ்லாமாபாத் : தோனி ஓய்வு குறித்த பேச்சு கிரிக்கெட் உலகில் மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது.

2020 ஐபிஎல் தொடர் நடக்காவிட்டால் தோனி, மீண்டும் இந்திய அணிக்கு தேர்வாக முடியாது என்பதே அதற்கு காரணம்.

இந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர், அதிரடியாக 2019 உலகக்கோப்பை அரையிறுதியில் தோனியால் போட்டியை பினிஷ் செய்ய முடியாத நிலையில், அப்போதே ஓய்வு பெற்று இருக்கலாம் என பகிரங்கமாக கூறி உள்ளார்.

சிறந்த கேப்டன் தோனி

சிறந்த கேப்டன் தோனி

தோனி இந்தியாவின் மூத்த வீரர், சிறந்த கேப்டனாக இருந்தவர். கடந்த 20 ஆண்டுகளில் கங்குலிக்கு பின் இந்திய அணியை வழிநடத்திய சிறந்த கேப்டன். ஆனாலும், அனைத்து ஜாம்பவான் வீரர்களுக்கும் கடைசி காலத்தில் ஏற்படும் அதே சிக்கல் தோனிக்கும் வந்தது.

மோசமான பார்ம்

மோசமான பார்ம்

2018ஆம் ஆண்டில் தோனி தன் கிரிக்கெட் வாழ்வின் படுமோசமான பார்மில் இருந்தார். விக்கெட் கீப்பிங்கில் உலகிலேயே சிறந்த வீரராக அப்போதும் இருந்தார். ஆனால், பேட்டிங்கில் மோசமாக தடுமாறினார். அப்போதே தோனியின் ஓய்வு பற்றி பேசப்பட்டது.

ஓய்வு பெறுவார்

ஓய்வு பெறுவார்

பின் 2019 உலகக்கோப்பை தொடருடன் தோனி ஓய்வு பெறுவார் என பரவலாக பேசப்பட்டது. அந்த தொடரில் தோனி சில போட்டிகளில் சேஸிங் செய்த போது தடுமாறினார். எனினும், இந்தியா அரை இறுதி வரை முன்னேறியது.

உலகக்கோப்பை அரை இறுதி

உலகக்கோப்பை அரை இறுதி

அந்தப் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் எல்லாம் சரிந்து போனது. தோனி, ஜடேஜா இணைந்து அணியை மீட்கும் பணியை செய்தனர். அந்தப் போட்டியில் தோனி சிறப்பாக ஆடினாலும், எதிர்பாராவிதமாக ரன் அவுட் ஆனார். இந்தியாதோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

டி20 உலகக்கோப்பை முயற்சி

டி20 உலகக்கோப்பை முயற்சி

அத்துடன் தோனி ஓய்வை அறிவிப்பார் என கூறப்பட்டது. ஆனால், தோனி எந்த ஓய்வு முடிவையும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், தோனி 2020 டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெற 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி தன்னை நிரூபிக்க தயாராகி வந்தார். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக அந்த தொடர் நடப்பதில் சந்தேகம் உள்ளது.

கண்ணியமாக வெளியேற வேண்டும்

கண்ணியமாக வெளியேற வேண்டும்

இந்த நிலையில், தோனி ஓய்வு பெறுவதை தவிர வேறு வழியில்லை என்ற பேச்சுக்கள் வருகின்றன. சோயப் அக்தரும் அது பற்றி பேசி உள்ளார். "இவர் தனது முழு திறனுக்கும் ஏற்ப செயல்பட்டுவிட்டார். அவர் கிரிக்கெட்டை விட்டு கண்ணியமாக வெளியேற வேண்டும்." என்றார்.

ஏன் இழுத்துக் கொண்டே இருக்கிறார்?

ஏன் இழுத்துக் கொண்டே இருக்கிறார்?

"அவர் ஏன் இன்னும் இழுத்துக் கொண்டே இருக்கிறார் என தெரியவில்லை. அவர் உலகக்கோப்பையுடன் ஓய்வு பெற்று இருக்க வேண்டும். நான் அவர் இடத்தில் இருந்திருந்தால் எப்போதோ ஓய்வு பெற்று இருப்பேன்." என்றார் சோயப் அக்தர்.

ஏன் ஓய்வு பெறவில்லை?

ஏன் ஓய்வு பெறவில்லை?

"அவர் (2019 உலகக்கோப்பை) அரை இறுதிப் போட்டியில் சரியாக பினிஷிங் செய்ய முடியாத போதே அவர் ஓய்வு பெற்று இருக்க வேண்டும் என நான் நினைத்தேன். ஆனால், ஏன் ஓய்வு பெறவில்லை என அவர் தான் கூற வேண்டும்" என கேள்வி எழுப்பி உள்ளார் சோயப் அக்தர்.

Story first published: Monday, April 13, 2020, 13:08 [IST]
Other articles published on Apr 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+