Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா? ஷோயப் அக்தர் அதிரடி!

இஸ்லாமாபாத் : முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷோயப் அக்தர், உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்காது என வரும் செய்திகள் குறித்து ஷோயப் அக்தர் தன் கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

ஷோயப் அக்தர் கூறுகையில் பிசிசிஐ உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆடவே விரும்புகிறது. ஆனால், அரசு தான் அதற்கு மறுக்கிறது என தெரிவித்தார்.

வருமானம்

வருமானம்

மேலும், இந்தியா - பாகிஸ்தான் தொடர் நடைபெற்றால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் பிசிசிஐ தான் அதிக லாபம் அடைவார்கள். அந்த தொடரில் சுமார் 600 மில்லியன் டாலர் அளவுக்கு வருமானம் கிடைக்கும் எனக் கூறினார் அக்தர்.

பிசிசிஐ கட்டுப்பாடு

பிசிசிஐ கட்டுப்பாடு

பிசிசிஐ-க்கு அது வேண்டாம் என்றா நினைக்கிறீர்களா? நிச்சயம் அவர்களுக்கு அது வேண்டும். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் பிசிசிஐ இருப்பதால் அவர்களால் இதில் முடிவெடுக்க முடியவில்லை என்றும் கூறினார் அக்தர்.

கண்டனம்!

கண்டனம்!

காஷ்மீர் தாக்குதல் சம்பவத்துக்கு தன் கண்டனங்களை தெரிவித்த அக்தர், அதே சமயம், நாடு என்ற அளவில் ஒன்றாக நிற்க வேண்டும். எனவே, தான் பிரதமர் இம்ரான் கான் கருத்தில் நிற்பதாகவும் கூறினார்.

விமர்சனம்

விமர்சனம்

மேலும், அக்தர் இந்திய முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் ஆடக் கூடாது என பேசி வருவதை விமர்சித்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் இணைப்புப் பாலமாகவே இருக்க வேண்டும். இந்த சூழலை மோசமாக்கும் வகையில் பேசக் கூடாது எனவும் தெரிவித்தார்.

முடிவு என்ன?

முடிவு என்ன?

ஷோயப் அக்தர் என்ன கூறினாலும், பிசிசிஐ தான் கிரிக்கெட் அமைப்புகளில் சக்தி வாய்ந்தது. இந்தியா தான் கிரிக்கெட்டில் மிகப் பெரிய ஆதிக்க சக்தி. பிசிசிஐ உலகக்கோப்பை போட்டி குறித்து என்ன முடிவெடுக்கும்? இப்போதைக்கு, மத்திய அரசின் முடிவை தாண்டி பிசிசிஐ எந்த முடிவுக்கும் வர வாய்ப்பில்லை.

Story first published: Thursday, February 21, 2019, 19:14 [IST]
Other articles published on Feb 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+