Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித்தை பாராட்டிய அக்தருக்கு பாக். ரசிகர்கள் எதிர்ப்பு.. இந்திய ரசிகர்களிடம் சிக்கிய முகமது கைஃப்

Recommended Video

ரோகித்தை பாராட்டிய அக்தருக்கு பாக்..ரசிகர்கள் எதிர்ப்பு..வீடியோ

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவை பாராட்டியதற்காக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தரை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

20 ஓவர் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஃபகர் ஜமான் சிறப்பாக பேட் செய்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.

இந்த சிறப்பான ஆட்டத்திற்காக அவரை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் பாராட்டியிருந்தார். இந்திய ரசிகர்களோ, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவரை பாராட்டுவதா எனக் கேட்டு கைஃபை கேலி செய்து ட்வீட் செய்திருந்தனர்.

முகமது கைஃப் பாராட்டு

முகமது கைஃப் தனது ட்வீட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டது. ஃபகர் ஜமான் சிறப்பான இன்னிங்சை வெளிப்படுத்தினார். அவர் ஒரு மிகச் சிறந்த வீரராக தோற்றமளிக்கிறார், வாழ்த்துக்கள், என்று தெரிவித்திருந்தார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இதனிடையே இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்திருந்தார்.

ரோகித் ஷர்மா சிறப்பு

த்ரிலிங்கான போட்டியில் ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் வீழ்த்தி இருந்தது. தற்போது முக்கியமான போட்டியில் ஹிந்துஸ்தான், இங்கிலாந்தை வென்றுள்ளது. துணைக்கண்ட அணிகள், 20 ஓவர் போட்டிகளில் மிகச்சிறப்பாக பங்களித்து வருகின்றனர். ரோஹித் சர்மா மிகச்சிறப்பான இன்னிங்சை ஆடினார். 20 ஓவர் போட்டிகளில் 3 சதங்கள் விளாசி உள்ளது என்பது லேசான விஷயம் அல்ல, இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இப்படி இருந்தால் எப்படி

இப்படி இருந்தால் எப்படி

இதை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் ரசிக்க வில்லை. அவர்கள் ஃபகர் ஜமானை அக்தர் இதைவிட சிறப்பாக போராடியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். இரு நாட்டு ரசிகர்களும் இப்படி முட்டிக்கொண்டிருப்பது கிரிக்கெட் விளையாட்டை ரசிக்கும் ரசிகர்களுக்கு எரிச்சலை கிளப்பியுள்ளது.

Story first published: Wednesday, July 11, 2018, 11:57 [IST]
Other articles published on Jul 11, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+