Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கங்குலி, டிராவிட்லாம் என்ன பண்றாங்கன்னு தெரியுமா? பாக். கிரிக்கெட்டை கிழித்து தொங்கவிட்ட அக்தர்!

கராச்சி : பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை சரமாரியாக விமர்சித்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர்.

இந்தியாவின் கங்குலி, டிராவிட் ஆகியோரை உதாரணம் காட்டி, பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை அவர் விமர்சித்து இருப்பது தான் இதில் உச்சகட்டம்.

கிரிக்கெட் அமைப்பின் தலைவர் பதவியில் தங்களுக்கு கீழ்ப்படியும் "ஆமாம் சாமி"களை நியமித்து வருவதை கடுமையாக சாடி இருக்கிறார் அக்தர்.

சரமாரி விமர்சனம்

சரமாரி விமர்சனம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு மோசமான நிர்வாகத்தை கொண்டுள்ளது என்ற விமர்சனம் நீண்ட காலமாக உள்ளது. இந்த நிலையில், முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் கங்குலி, டிராவிட் பிசிசிஐ அமைப்பில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் சிறப்பாக செயல்படுவதை சுட்டிக் காட்டி தங்கள் நாட்டு கிரிக்கெட் அமைப்பை விமர்சித்துள்ளார்.

பிசிசிஐ அமைப்பு

பிசிசிஐ அமைப்பு

பிசிசிஐ அமைப்பு கடந்த செப்டம்பர் மாதத்திற்கு முன்பு வரை உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது பல பதவிகளுக்கும் முன்னாள் வீரர்கள் நியமிக்கப்பட்டனர். பயிற்சியாளர் குழு கூட முழுமையாக இந்தியர்களால் நிரம்பி இருந்தது.

கங்குலி தலைவர்

கங்குலி தலைவர்

அதன் பின் தேர்தல் நடத்தப்பட்ட போது, முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் பதவி ஏற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பகல் - இரவு டெஸ்ட், உள்ளூர் வீரர்கள் சம்பள உயர்வு என மாற்றத்தை ஏற்படுத்தினார்.

டிராவிட் என்ன செய்கிறார்?

டிராவிட் என்ன செய்கிறார்?

டிராவிட் கடந்த சில வருடங்களாக இந்தியா ஏ அணி மற்றும் அண்டர் 19 அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்து வந்தார். அவரால் அடையாளம் காணப்பட்ட போல தற்போது இந்திய அணியில் உள்ளனர். டிராவிட் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவியில் இருக்கிறார்.

பாகிஸ்தான் நிலை

பாகிஸ்தான் நிலை

இந்தியா முன்னாள் வீரர்களை அடிப்படையாக வைத்து நிர்வாகத்தை சீர் செய்து வரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பில் அதிகாரவர்க்கம் முன்னாள் வீரர்கள், கேப்டனை அடக்கி ஆள்வதாக புகார் உள்ளது. அவர்கள் இன்னும் பழைய நடைமுறைகளையே பின்பற்றுவதாக பொதுவான குற்றச்சாட்டு உள்ளது.

அக்தர் விமர்சனம்

அக்தர் விமர்சனம்

எப்போதும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை விளாசத் தயங்காத ஷோயப் அக்தர் ஒரு பேட்டியில், மீண்டும் தங்கள் நாட்டு கிரிக்கெட் அமைப்பை சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார். தனக்கு கிரிக்கெட் அமைப்பில் வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் கூறி உள்ளார்.

கீழ்ப்படியும் ஆள் தான் தேவை

கீழ்ப்படியும் ஆள் தான் தேவை

"மேல்தட்டு மக்களுக்கு தங்களுக்கு கீழே கீழ்ப்படியும் ஒரு கூட்டம் வேண்டும். அப்போது தான் அவர்கள் தங்கள் கட்டளைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். அப்படி ஒரு தலைவர் அவர்களுக்கு வேண்டும், ஒரு கீழ்ப்படியும் கேப்டன் வேண்டும்." என விமர்சித்தார் அக்தர்.

கீழ்ப்படியும் கேப்டன்

கீழ்ப்படியும் கேப்டன்

மேலும், நமக்கு கேப்டன் வேண்டுமா? அல்லது வேறு ஏதும் வேண்டுமா? ஒரு கீழ்ப்படியும் கேப்டன், அவர் என்ன செய்வார்? அவர் களத்தில் நடந்து செல்ல வேண்டுமா? அல்லது தொழுகை செய்ய வேண்டுமா?" என கடும் சொற்களால் விளாசினார் அக்தர்.

கங்குலி, டிராவிட் போல..

கங்குலி, டிராவிட் போல..

மேலும், இந்தியா, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அமைப்புகளில் முன்னாள் வீரர்கள் பதவிகளில் இருப்பதை சுட்டிக் காட்டினார். "சௌரவ் கங்குலி பிசிசிஐ தலைவர். ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர். கிரேம் ஸ்மித் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்டின் தலைவர். அங்கே மார்க் பவுச்சர் தான் தலைமை பயிற்சியாளர்" என்றார்.

என் வேலை இது அல்ல

என் வேலை இது அல்ல

"ஆனால், இதற்கு நேர்மாறாக பாகிஸ்தானில் நடந்து வருகிறது. அவர்கள் என்னை பயன்படுத்தவில்லை. என் வேலை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அமர்ந்து இருப்பது அல்ல. அவர்கள் என்னை கிரிக்கெட்டை நிர்வகிக்க அனுமதிக்கவில்லை" எனவும் கூறினார் ஷோயப் அக்தர்.

பதவி கொடுக்கலைனு திட்டுறாரா? இல்லை பதவி வேணும்னு திட்டுறாரா?

Story first published: Wednesday, March 18, 2020, 16:56 [IST]
Other articles published on Mar 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+