For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏன் இந்தியாவிடம் பிச்சை எடுக்குறீங்க.. பாக். கிரிக்கெட் வாரியம் மீது பாயும் சோயப் அக்தர்

கராச்சி: இந்தியாவிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதற்குப் பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை வலுவுள்ளதாக மாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அறிவுரை கூறியுள்ளார் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சோயப் அக்தர்.

இரு நாட்டு கிரிக்கெட் உறவுகளை சுமூகமாக்குவதற்காக இந்தியாவிடம் பிச்சை எடுப்பதையும், பின்னாலேயே திரிவதையும் முதலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதற்கு மாறாக, உலகத் தரம் வாய்ந்த அணியாக பாகிஸ்தானை மாற்றிக் காட்டுவதில் முனைப்பு காட்ட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பைசலாபாத் ஓநாய்களுக்கு விசா கிடையாது...

பைசலாபாத் ஓநாய்களுக்கு விசா கிடையாது...

இந்தியாவில் சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான போட்டி தொடங்கவுள்ளது. இதில் பாகிஸ்தானின் பைசலாபாத் உல்ப்ஸ் என்ற அணியும் பங்கேற்கிறது. ஆனால் இதன் வீரர்களுக்கு விசா வழங்க இந்தியா மறுத்து விட்டது. இதுகுறித்து அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதில் அதிர்ச்சி என்ன இருக்கிறது..

இதில் அதிர்ச்சி என்ன இருக்கிறது..

இதுகுறித்து அக்தர் கூறுகையில், இதைக் கேட்டு நான் ஆச்சரியப்படவில்லை. இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே சுமூக நிலை இல்லை. நட்புறவு இல்லை. அப்படி இருக்கையில், நாம் ஏன் இந்திய கிரிக்கெட் வாரியம் நமக்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டும்.

தேவையே இல்லை

தேவையே இல்லை

நாம் எப்போதும் இந்திய கிரிக்கெட் வாரியத்தை சார்ந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. பிச்சை எடுக்கத் தேவையில்லை. இரு நாட்டு கிரிக்கெட் உறவுகள் சுமூகமாக வேண்டும் என்று அவர்கள் பின்னாலேயே போய்க் கொண்டிருக்கத் தேவையில்லை.

அரசு சொல்வதை இந்திய வாரியம் கேட்கிறது

அரசு சொல்வதை இந்திய வாரியம் கேட்கிறது

இந்திய அரசின் கொள்கைப்படி இந்திய கிரிக்கெட் வாரியம் நடக்கிறது, கேட்கிறது. எனவே நாம் அவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

நாம் சம்மதித்திருக்கவே கூடாது

நாம் சம்மதித்திருக்கவே கூடாது

இந்தியாவுக்கு வந்து விளையாடுமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைத்தபோது நாம் போனதே தவறு. நாம் போயிருக்கக் கூடாது. தேங்க்ஸ் சொல்லி மறுத்து உறுதியாக இருந்திருக்க வேண்டும். நமது சுயமரியாதையை நாம்தான் காக்க வேண்டும்.

ஆகட்டுமே...

ஆகட்டுமே...

நமது அணியை உலகத் தரம் வாய்ந்த அணியாக மாற்ற வேண்டும். அதில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அக்கறை காட்ட வேண்டும்.. என்ன இதற்கு சில ஆயிரம் டாலர்கள் செலவாகுமா.. ஆகி விட்டுப் போகட்டுமே. என்ன நஷ்டம் வந்து விடும். இந்தியாவை விட மிகப் பெரிய அணியாக பாகிஸ்தானை மாற்றினால் அது பெருமைதானே... முதலில் நாம் சரியாவோம். பின்னர் பிறவற்றைப் பற்றிப் பேசுவோம்.

எல்லாவற்றையும் மாற்றுங்கள்

எல்லாவற்றையும் மாற்றுங்கள்

அடிப்படைக் கட்டமைப்பு, வீரர்கள் தேர்வு, தரமான அணி என அனைத்தையுமே வலுவானதாக மாற்ற வேண்டும். அப்படி செய்தால் நாம் யாரிடமும் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே வராது என்றார் அக்தர்.

Story first published: Friday, September 13, 2013, 13:43 [IST]
Other articles published on Sep 13, 2013
English summary
Former Pakistan speedster Shoaib Akhtar says instead of running after the BCCI for normalising cricket ties, the Pakistan Cricket Board should focus on converting the national team into a world class side. The Indian government has rejected visa applications of the players of Pakistani side Faisalabad Wolves, which was to play in the Champions League Twenty20 tournament.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+