Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னங்க நீங்க இப்படியா பண்றது... மத்தவங்களுக்கு ரோல்மாடலா இருக்க வேணாமா?

இஸ்லாமாபாத் : கொரோனா வைரஸ் காரணமாக பாகிஸ்தானிலும் வரும் 14ம் தேதிவரை ஊரடங்கு அமலில் உள்ளது. அங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

Recommended Video

Shoaib Akhtar says Dhoni Should Have Retired After The 2019 WC

இந்நிலையில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், இஸ்லாமாபாத்தின் காலி சாலைகளில் சைக்கிள் ஒட்டி சென்றுள்ளார். மேலும் காலி சாலைகளில் இதமான வானிலையில் சைக்கிள் ஓட்டுவது இனிய அனுபவம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து சமூக வலைதளங்களில் அவரை ரசிகர்கள் வறுத்தெடுத்துவிட்டனர். அனைவரும் உயிர் பயத்துடன் வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில், அக்தர் போன்ற ஒரு பிரபலம் இவ்வாறு நடந்து கொள்வது மோசமான உதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

கிரிக்கெட் வர்ணனையாளர்

கிரிக்கெட் வர்ணனையாளர்

முன்னாள் பந்துவீச்சாளரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான சோயிப் அக்தர் சமூக வலைதளங்களில் பரபரப்பாக இயங்கிவருபவர். தன்னுடைய யூடியூப் மூலம் இவர் அவ்வப்போது கிரிக்கெட் வர்ணனைகளை தொடர்ந்து செய்து வருகிறார். இந்தியா -பாகிஸ்தான் தொடர்மூலம் நிதி வசூலித்து, இரு நாடுகளும் தற்போதைய கொரோனாவைரஸ் பாதிப்பிற்கு பயன்படுத்தலாம் என்று சில தினங்களுக்கு முன்பு இவர் கூறியிருந்தார். அதற்கு முன்னாள் ஆட்டக்காரர் கபில்தேவ் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செயல்முறையில் இல்லை என குற்றச்சாட்டு

தற்போது உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் குறித்தும், அதன்மூலம் விளையாட்டு போட்டிகள் முடங்கியுள்ளது குறித்தும் தொடர்ந்து பல்வேறு பேச்சுகளை இவர் தனது யூடியூப் மூலம் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி போன இஸ்லாமாபாத்தின் சாலைகளில் சைக்கிள் பயணம் மேற்கொண்ட சோயிப் அக்தர், அதை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

இதமான வானிலை

இதமான வானிலை

கொரோனா வைரஸ் குறித்து தொடர்ந்து தன்னுடைய வருத்தங்களை வெளியிட்டுவரும் அக்தர், இஸ்லாமாபாத்தின் காலியான சாலைகளில் பயணம் மேற்கொண்டு, யாருமற்ற சாலைகள், இதமான வானிலையில் சைக்கிள் பயணம் செய்வது சிறந்த உடற்பயிற்சி என்று குறிப்பிட்டு பேஸ்புக்கில் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்துவிட்டனர். மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கவேண்டிய அவர், இவ்வாறு நடந்து கொண்டது குறித்து அவர்கள் ஆத்திரம் தெரிவித்தனர்.

ஒன்றுதிரண்டு போராட கோரிக்கை

ஒன்றுதிரண்டு போராட கோரிக்கை

கொரோனாவிற்கு எதிராக உலகளவில் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட வேண்டும் என்று முன்னதாக கேட்டுக்கொண்டார் அக்தர். ஆனால் தற்போது அவரது சைக்கிள் பயணம் தவறான முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். அவரை மற்றவர்களும் பின்பற்ற வாய்ப்பாக இது அமையும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பிரபலங்களின் தவறான செயல்கள்

பிரபலங்களின் தவறான செயல்கள்

இந்த நெருக்கடியான சூழலில் உலகளவில் பிரபலங்கள், தங்களது ரசிகர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும், பின்பற்றக்கூடிய வழிமுறைகளையும் போதித்து வரும் நிலையில், நம்ம ஊர் பிரபலங்கள் இத்தகைய தவறான செயல்களை செய்து, அதை சமூகவலைதளங்களில் வேறு பரப்பி வருகின்றனர் என்றும் ஒரு ரசிகர் ஆதங்கம் தெரிவித்தார்.

Story first published: Sunday, April 12, 2020, 17:17 [IST]
Other articles published on Apr 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+