For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாங்க பந்து வீசி இருந்தால்.. கோலியால் 30 ரன் கூட தாண்ட முடியாது.. சோயிப் அக்தர் சர்ச்சை பேச்சு

மும்பை : உலகத்தின் சிறந்த கிரிக்கெட் பேட்ஸ்மேன் என்றால் அது சச்சினா? விராட் கோலியா? என பல காலம் விவாதம் நடைபெற்று வருகிறது. சச்சினின் மகத்தான சாதனையை விராட் கோலி ஒவ்வொன்றாக உடைத்து வருகிறார்.

இதுவரை கிரிக்கெட் விளையாடுவதில் அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் முதலிடத்தில் இருக்கிறார். இப்போது விராட் கோலி 75 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

விராட் கோலி 497 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று மொத்தமாக 25,321 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 130 முறை அரை சதம் கடந்திருக்கிறார்.

வேறு காலம்

வேறு காலம்

மேலும் உலக அளவில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி தற்போது ஆறாம் இடத்தில் இருக்கிறார். விராட் கோலி இன்னும் ஆறு ஆண்டுகள் விளையாடினால், சச்சின் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலி விளையாடிய காலம் வேறு? சச்சின் விளையாடிய காலம் வேறு என்றும் அதனை ஒப்பிட்டு பார்க்க கூடாது என்றும் பல கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியிருக்கின்றனர்.

பந்துவீச்சாளர்கள் தரம்

பந்துவீச்சாளர்கள் தரம்

உதாரணத்திற்கு சச்சின் விளையாடிய காலத்தில் பில்டிங் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. மேலும் இன்னிங்ஸ் முழுவதும் ஒரு பந்து வைத்து தான் விளையாடுவார்கள். ஆனால் தற்போது இரண்டு பந்துகள் ஒவ்வொரு முனைக்கும் பயன்படுத்தப்படுவதால் ஒருநாள் கிரிக்கெட்டில் சுலபமாக ரன் அடிக்க முடிகிறது. மேலும் பந்துவீச்சாளர்களின் தரமும் குறைந்து விட்டது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

தாண்டி இருக்க முடியாது

தாண்டி இருக்க முடியாது

இது குறித்து பேசிய, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர், விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன்.ஆனால் எங்கள் காலத்தில் சிறந்த பந்துவீச்சாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். விராட் கோலி மட்டும் எங்கள் காலத்தில் விளையாடி இருந்தால், அவரால் 30 ரன்களை கூட தாண்டி இருக்க முடியாது. சதங்களும் இவ்வளவு அடித்திருக்க முடியாது.

ரன்கள் கொடுத்திருக்க மாட்டார்கள்

ரன்கள் கொடுத்திருக்க மாட்டார்கள்

எங்கள் காலத்தில் வசீம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்ற அபாயகரமான பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். அவர்களெல்லாம் விராட் கோலிக்கு எதிராக ரன்களை கொடுத்து இருக்க மாட்டார்கள். இதனால் தான் சொல்கிறேன் எங்கள் காலத்தில் ஆடிக்கப்பட்ட சங்கங்கள் தான் சிறந்தது என்று சோயிப் அக்தர் கூறி இருக்கிறார். விராட் கோலி மற்றும் சோயிப் அக்தர் ஒரே ஒரு முறை ஆசிய கோப்பை 2010 ஆம் ஆண்டு விளையாடி இருக்கிறார்கள். ஆனால் விராட் கோலி அந்த ஆட்டத்தில் முன்பே பெவிலியன் திரும்பியதால் சோயிப் அக்தர் அவருக்கு பந்து வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, March 23, 2023, 18:47 [IST]
Other articles published on Mar 23, 2023
English summary
Shoaib akthar feels if virat kohli playing in his era wont cross 30 runs நாங்க பந்து வீசி இருந்தால்.. கோலியால் 30 ரன் கூட தாண்ட முடியாது.. சோயிப் அக்தர் சர்ச்சை பேச்சு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+