Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதெல்லாம் பெரிய அவமானம் பாஸ்.. நம்பவே முடியலை.. இந்திய அணி பற்றி அக்தர் சொன்ன வார்த்தை.. சர்ச்சை

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து சோயப் அக்தர் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமாக அடி தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் .முதல் இன்னிங்சில் 244 எடுத்த இந்திய அணி அடுத்த இன்னிங்சில் வெறும் 36 ரன்கள் எடுத்து மிக மோசமான ஆட்டம் ஆடியது. முதல் இன்னிங்சில் 191 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி அடுத்த இன்னிங்சில் 2 விக்கெட்டில் 93 ரன்கள் எடுத்து வென்றது.

மோசம்

மோசம்

இந்த அணியின் இந்த மோசமான தோல்வியை உலகம் முழுக்க கிரிக்கெட் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கூட இதை கிண்டல் செய்ய தொடங்கி உள்ளனர். இந்திய அணி வீரர்கள் மன ரீதியாக பெரிய அளவில் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து சோயப் அக்தர் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், நான் தூங்கிக் கொண்டு இருந்தேன் . எழுந்து பார்த்த போது இந்திய அணி 369 ரன்கள் எடுத்து இருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை.

நம்ப முடியவில்லை

நம்ப முடியவில்லை

கண்ணை கசக்கிக் கொண்டு ஸ்கீரினை பார்த்தேன். இந்தியா 36 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்து இருந்தது . ஆனால் இதையும் கூட என்னால் நம்ப முடியவில்லை. இந்தியா அவமானகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. இந்திய விமர்சனங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

மோசம்

மோசம்

மிகவும் அவமானகாரமான தோல்வி. மிக மோசமான பேட்டிங் இது. மிக சிறப்பான பேட்டிங் ஆர்டர் கொண்ட அணி இப்படி விக்கெட்டை இழப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பாகிஸ்தானின் மோசமான ரெக்கார்டை இந்தியா மிஞ்சி இருக்கிறது.

கிரிக்கெட்

கிரிக்கெட்

இது கிரிக்கெட் . இப்படித்தான் நடக்கும். இதை அனுபவிக்க வேண்டும் , ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இதை கடந்து சென்று இனி வரும் போட்டிகளில் கவனமாக ஆட வேண்டும். சிறப்பான இந்திய அணிக்கு இது மிக மோசமான கஷ்ட காலம் என்று அக்தர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, December 22, 2020, 10:17 [IST]
Other articles published on Dec 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+