100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர்.. யார் தெரியுமா?
ஹராரே : 100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெயரை பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் பெற்றுள்ளார்.
பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இங்கு ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடரில் அது பங்கேற்கிறது. முதலாவது போட்டியில் ஜிம்பாப்வே - பாகிஸ்தான் மோதின. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இப்போட்டி தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பீல்டிங்கை தேர்ந்து எடுத்தது. இப்போட்டியில் விளையாடுவதன் மூலம் 100 டி20 போட்டிகளில் ஆடிய முதல் வீரர் என்ற பெருமையை சோயிப் மாலிக் பெற்றார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் , டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதை செய்த முதல் பாகிஸ்தான் வீரர் என்பதும் சிறப்பம்சமாகும்.
இதற்கு முன்னதாக மற்றுமொரு பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி 99 டி20 போட்டிகளில் பங்குபெற்றதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது இடத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி 90 போட்டிகளில் விளையாடியுள்ளார்.மற்ற இந்திய வீரர்கள் வரிசையில் ரோஹித் சர்மா 81 போட்டிகளில் விளையாடி 6ஆவது இடத்திலும் , ரெய்னா 75 போட்டிகளில் விளையாடி 11ஆவது இடத்திலும் உள்ளனர்.
தனது 100ஆவது போட்டியில் அணிக்கு வெற்றியை தேடித் தருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Story first published: Monday, July 2, 2018, 14:28 [IST]
Other articles published on Jul 2, 2018


Click it and Unblock the Notifications