Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பையோடு கிரிக்கெட்டுக்கு ஓய்வு: 'இந்திய மருமகன்' சோயிப் மாலிக் அறிவிப்பு

ராய்ப்பூர்: அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியோடு ஓய்வு பெற உள்ளார் பாகிஸ்தான் ஆல்-ரவுண்டரும், இந்தியாவின் மருமகனுமான சோயிப் மாலிக்.

34 வயதான பாகிஸ்தான் நாட்டு ஆல்-ரவுண்டர் சோயிப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணந்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் அணியான ஹோபர்ட் ஹரிகேன்ஸ் சார்பில் விளையாடிவருகிறார்.

சோயிப் அதிரடி

சோயிப் அதிரடி

நேற்றிரவு நடந்த நார்தன் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி காண்பித்த சோயிப், 22 பந்துகளில் 45 ரன்களை குவித்தார். அணியின் வெற்றிக்கு இவரது அதிரடியும் ஒரு வகையில் உதவி செய்தது.

ஓய்வு முடிவு

ஓய்வு முடிவு

இந்நிலையில், சிறிது காலமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படாமல் இருக்கும் தனக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று சோயிப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐம்பது ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிவிட்டு அதன்பிறகு ஓய்வு பெறப்போவதாகவும் சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.

வாய்ப்பு கிடைக்குமா?

வாய்ப்பு கிடைக்குமா?

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தேர்வாளர்கள், கேப்டன் ஆகியோர் எனது கோரிக்கையை பரிசீலிப்பார்கள் என்று கருதுகிறேன். மீண்டும் தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், தொடர்ந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று சோயிப் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் முக்கியம்

கிரிக்கெட் முக்கியம்

கிரிக்கெட் எனக்கு உயிர்நாடி. ஆட்டம் சரியாக வராவிட்டால் அறையில் சென்று ஒதுங்கிக்கொள்ளும் ஆள் நான் கிடையாது. மீண்டும் ஆட்டத்தில் கவனத்தை குவிப்பதற்காக, இசையை கேட்பது, நீச்சல் அடிப்பது, குடும்பத்தாருடன் பேசுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்

Story first published: Wednesday, September 24, 2014, 16:40 [IST]
Other articles published on Sep 24, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+