Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புது மனைவியை அப்செட் ஆக்கிய சோயப் மாலிக்.. பாகிஸ்தான் டி20 போட்டியில் நடந்த சோகம்

கராச்சி : சில மாதங்கள் முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், இந்தியாவின் சானியா மிர்சாவை கைவிட்டு, மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறார். அந்த தொடரில் தனது கணவர் ஆட்டத்தை பார்க்க சனா ஜாவேத் நேரில் வந்தார்.

ஆனால், சோயப் மாலிக் படுமோசமாக ஆடி பவுல்டு அவுட் ஆனார். அதைக் கண்ட சனா ஜாவேத் அதிருப்தி அடைந்து ஏமாற்றம் அடைந்தார். அந்த காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

Shoaib Malik Sana Javed upset on her husband batting performance in PSL 2024

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் கராச்சி கிங்ஸ் அணி சார்பில் சோயப் மாலிக் ஆடி வருகிறார். பெஷாவர் சால்மி அணிக்கு எதிரான லீக் போட்டியில் அவர் பங்கேற்றார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்தது.

அடுத்து ஆடிய கராச்சி அணியில் துவக்க வீரர் டிம் செய்ஃபர்ட் 30 பந்துகளில் 41 ரன்கள் எடுத்த போதும், ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் சோயப் மாலிக் தங்களின் நிதான ஆட்டத்தால் தங்கள் அணியின் தோல்விக்கு காரணமாக மாறினர். வின்ஸ் 27 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். சோயப் மாலிக் 25 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே சேர்த்தார். நவீன் உல் ஹக் வீசிய பந்தில் பவுல்டு அவுட் ஆனார் சோயப் மாலிக்.

Shoaib Malik Sana Javed upset on her husband batting performance in PSL 2024

இதை அடுத்து சனா ஜாவேத் பெரும் ஏமாற்றம் அடைந்தார். சோயப் மாலிக் இந்த ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் சரியாக செயல்படவில்லை. இந்த நிலையில் அவரது மனைவி சனா ஜாவேத் ஒவ்வொரு போட்டியின் போதும் அவர் ஆட்டத்தை காண நேரில் வந்து ஏமாற்றம் அடைந்து சென்று கொண்டு இருக்கிறார். சனா ஜாவேத்தை பாகிஸ்தான் ரசிகர்கள் கிண்டல் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, March 12, 2024, 13:30 [IST]
Other articles published on Mar 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+