For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கைமாறிய 15 கோடி.. ஆயிஷாவை போனிலேயே விவாகரத்து செய்த சோயப் மாலிக்.. சானியா மிர்சாவுக்கும் அதே நிலை

ஹைதராபாத் : சானியா மிர்சாவை கைவிட்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் மூன்றாவது திருமணம் செய்துள்ள நிலையில், சானியா மிர்சா அவரை தொலைபேசியிலேயே விவாகரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது. தன் முதல் மனைவி ஆயிஷாவை இதே முறையில் தான் சோயப் மாலிக் விவாகரத்து செய்து இருந்தார். அப்போது இதை விட சர்ச்சைகள் வெடித்தன.

ஆந்திராவின் ஹைதராபாத் நகரை சேர்ந்த ஆயிஷா சித்திக்கி என்ற பெண், சோயப் மாலிக்கின் ரசிகை எனக் கூறி அவருடன் பழகி இருக்கிறார். 2002ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் அவர்களுக்கு எளிமையாக திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதன் பின் 2010இல் சோயப் மாலிக், சானியா மிர்சாவை நிச்சயம் செய்தார். அப்போது ஆயிஷா, தன்னை சோயப் மாலிக் முதல் திருமணம் செய்து விட்டு அதை மறைத்து சானியா மிர்சாவை திருமணம் செய்ய உள்ளதாக புகார் அளித்தார்.

Shoaib Malik - Sania Mirza : First Marriage that begin and ends with telephone

அப்போது சோயப் மாலிக், தான் ஆயிஷாவை பார்க்காமல் தொலைபேசியில் திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் 2005இல் அவரை நேரில் பார்த்த போது புகைப்படத்தில் காட்டப்பட்ட பெண்ணும், நேரில் பார்த்த ஆயிஷாவும் வெவ்வேறு நபர்கள் என்பதை தெரிந்து கொண்டதாகவும் கூறினார். அப்போது சோயப் மாலிக்கின் குடும்ப நண்பர் ஒருவர் மாலிக் பொய் சொல்வதாக பாகிஸ்தான் ஊடகங்களிடம் தெரிவித்ததால் இந்த விவகாரம் அப்போது பெரிதாக வெடித்தது.

பின்னர் சோயப் மாலிக் - சானியா மிர்சா திருமணத்துக்கு சில நாட்கள் இருந்த நிலையில் சிலர் ஆயிஷா - சோயப் மாலிக் இடையே சமரசம் பேசி விவாகரத்து பெற்றுத் தந்தனர். அப்போது சோயப் மாலிக் தொலைபேசியில் மூன்று முறை தலாக் சொல்லி ஆயிஷாவை விவாகரத்து செய்தார். மேலும், ஆயிஷாவுக்கு ஜீவனாம்சமாக 15 கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இப்போது சானியா மிர்சாவை கைவிட்ட சோயப் மாலிக் மூன்றாவதாக பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து இருக்கும் நிலையில், சானியா மிர்சா எப்படி விவாகரத்து செய்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மனைவி தன்னிச்சையாக கணவனை விவாகரத்து செய்யும் "குலா" எனும் முறைப்படி தொலைபேசியில் "குலா" எனக் கூறி சோயப் மாலிக்கை விவாகரத்து செய்து இருக்கிறார். இந்த தகவலை சானியாவின் தந்தை ஊடகங்களிடம் கூறி இருக்கிறார்.

Story first published: Sunday, January 21, 2024, 18:41 [IST]
Other articles published on Jan 21, 2024
English summary
Shoaib Malik - Sania Mirza : First Marriage that begin and ends with telephone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+