For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சானியா மிர்சாவை ஏமாற்றிய சோயப் மாலிக்.. 5 பெண்கள் மட்டும் இல்லை.. ஆதாரத்தை காட்டும் ரசிகர்கள்

ஹைதராபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், சானியா மிர்சாவை பிரிந்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் சோயப் மாலிக் முன்பு ஒரு பேட்டியில் பேசி உள்ள விஷயத்தையும் முக்கிய ஆதாரமாக காட்டுகிறார்கள் ரசிகர்கள்.

கடந்த 2010இல் சோயப் மாலிக் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில், சானியா மிர்சாவை விவாகரத்து செய்துவிட்டு மூன்றாவதாக பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டார்.

Shoaib Malik - Sania Mirza : Shoaib Malik once said he likes 500 girls

அவரின் மூன்றாவது திருமணத்தில் அவரது குடும்பத்தினர் யாரும் பங்குபெறவில்லை என பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. மேலும், சோயப் மாலிக் பல பெண்களுடன் சுற்றினார் என்றும், அதனால் சானியா மிர்சா விரக்தி நிலையில் இருந்ததாகவும் சோயப் மாலிக்கின் சகோதரி கூறியதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன.

இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக ரசிகர்கள் சோயப் மாலிக்கின் பழைய பேட்டியில் அவர் பேசிய ஒரு விஷயத்தை மட்டுமே எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். அதில் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் பேட்டி எடுக்கிறார். அவர் சோயப் மாலிக்கிடம் உங்களுக்கு பிடித்த ஐந்து பெண்களின் பெயர்களை கூறுங்கள் என கேள்வி எழுப்புகிறார். அதற்கு சோயப் மாலிக், "எல்லா பெண்களும் அழகாக இருக்கிறார்கள். எனக்கு ஐந்து பெண்கள் அல்ல, 500 பெண்களை பிடிக்கும்" எனக் கூறி இருக்கிறார். அதைக் கேட்டு வாயடைத்துப் போகிறார் சோயப் அக்தர்.

இந்த வீடியோ தான் இப்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பிடித்த பெண்கள் எனக் கேட்டால், அம்மா, மனைவி, சகோதரி என்று கூட கூறி இருக்கலாம். ஆனால், சோயப் மாலிக் எண்ணம் அழகான பெண்கள் என்பதாகவே இருக்கிறது. மேலும், ஒருவர் கணக்கு வழக்கே இல்லாமல் 500 பெண்களை பிடிக்கும் என்று கூறுகிறார் என்றால் அவர் மீது இயல்பாகவே சந்தேகமும் எழுகிறது என்பதால் இந்த வீடியோ தற்போது பகிரப்பட்டு வருகிறது.

Story first published: Sunday, January 21, 2024, 11:18 [IST]
Other articles published on Jan 21, 2024
English summary
Shoaib Malik - Sania Mirza : Shoaib Malik once said he likes 500 girls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+