Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கா வயசாகிடுச்சு.. படையப்பா ஸ்டைலில் சட்டையை கழற்றிய சோயிப் மாலிக்.. 41 வயதில் சிக்ஸ் பேக்ஸ்

கராச்சி : 2022 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியில் 40 வயதான சோயிப் மாலிக் சேர்க்கப்படவில்லை.

நல்ல பார்மில் இருந்தும், நல்ல உடல் தகுதியுடன் இருந்தும் மாலிக் இடம்பெறாதது பல்வேறு விமர்சங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் என்றாலே, உடல் தகுதி இல்லாமல், பருமனாக இருப்பார்கள் என்ற விமர்சனம் இருக்கும். இது குறித்து பாகிஸ்தான் ரசிகர்களே பல முறை கிண்டல் செய்து இருக்கின்றனர்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

ஆனால், பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக், 40 வயதிலும் சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து அட்டகாசமாக காட்சி அளிக்கிறார். இது குறித்து இன்ஸ்டாகிராமில் தாம் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை சோயிப் மாலிக் பதிவிட்டுள்ளார். அதில் மாலிக் இரும்பு போன்ற தேகத்துடன் காட்சி அளிக்கிறார். அதில் விலகுவது என்ற ஆப்சனே கிடையாது என்று பதிவிட்டுள்ளார்.

பதிலடி தந்த மாலிக்

பதிலடி தந்த மாலிக்

பாகிஸ்தான் அணியில் வயதை காட்டி சோயிப் மாலிக் சேர்க்கப்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அதற்கு பதிலடி தரும் வகையில் மாலிக், தனது உடல் பயிற்சி குறித்து பதிவிட்டுள்ளார். 40 வயதான சோயிப் மாலிக், பாகிஸ்தானில் நடைபெற்ற உள்நாட்டு டி20 தொடரான நேசனல் கப் ஆட்டத்தில் 204 ரன்கள் அடித்தார்.

2022 ஆம் ஆண்டில் மாலிக்

2022 ஆம் ஆண்டில் மாலிக்

இதில் 2 அரைசதங்கள் அடங்கும். அந்த தொடரில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 140.68 ஆகும். இதே போன்று நடப்பாண்டில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் 11 இன்னிங்சில் 401 ரன்களை விளாசினார்.

இதில் 3 அரைசதம் அடங்கும். சோயிப் மாலிக்கின் ஸ்ட்ரைக் ரேட் 137 ஆக இருந்தது. இந்த நிலையில், சோயிப் மாலிக் கடந்த உலககோப்பை தொடருக்கு பிறகு நடைபெற்ற டி20 தொடரில் வங்கதேத்தை தவிர வேறு எந்த தொடரில் தேர்வாகவில்லை.

மாலிக் விளக்கம்

மாலிக் விளக்கம்

இவ்வளவு சிறப்பாக செயல்பட்டும், முழு உடல் தகுதியிடன் இருந்தும் சோயிப் மாலிக் சேர்க்கப்படவில்லை. இது குறித்து ஏற்கனவே பேசிய சோயிப் மாலிக், கிரிக்கெட் விளையாடுவது மட்டும் தான் தமது பணி. என்னை தேர்வு செய்வதும், செய்யாததும் தேர்வுக்குழுவினரின் விருப்பம். தமக்கும் பாபர் அசாம்க்கும் நல்ல நட்பு இருக்கிறது. அதனால், என்னை ஏன் அணியில் சேர்க்கவில்லை என்று எல்லாம் கேட்க மாட்டேன் என்று கூறி இருந்தார்.

Story first published: Tuesday, October 18, 2022, 19:39 [IST]
Other articles published on Oct 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+