
இறுதிப்போட்டி
மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெறும் இந்த போட்டி நடக்குமா என்பதிலேயே தற்போது சிக்கல் உருவாகியுள்ளது. அதற்கு காரணம் மழை தான். நடப்பு தொடரில் பல்வேறு லீக் போட்டிகள் மழையினால் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே போல இந்த இறுதிப்போட்டியும் மழையினால் ரத்து செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

மழைக்கான வாய்ப்பு
போட்டி நடைபெறும் மெல்பேர்ன் நகரத்தில் மிகவும் மோசமான வானிலையுடன் மழை பெய்து வருகிறது. இறுதிப்போட்டி நடக்கும் நாளன்றும் அதிகளவில் மழைப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. 100% மழை வரும் என்பதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

போட்டி ரத்தானால்?
ஒருவேளை இறுதிப்போட்டி மழையினால் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டால், ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஞாயிறு அன்று போட்டி பாதித்தால், திங்கட்கிழமை விட்டதில் இருந்து தொடங்கப்படும். ஒருவேளை ஞாயிறு அன்று ஓவர்கள் குறைக்கப்பட்டும் போட்டி பாதிக்கப்பட்டால், திங்களன்று 20 ஓவர்களாக அது மாற்றப்படும்.

2 நாளும் ரத்தானால்?
தற்போதைய நிலவரப்படி திங்கட்கிழமையன்றும் 90% வரை மழைப்பொழிவுக்கான வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை அன்றும் போட்டி நடக்கவில்லை என்றால் டிரா என அறிவிக்கப்படும். மேலும் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து இரு அணிகளுமே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.


Click it and Unblock the Notifications