சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஐபிஎல் மினி ஏலத்தில் ஏற்பட்ட பெரும் பின்னடைவு..என்ன செய்யப்போறாங்களோ??
கொச்சி: ஐபிஎல் ஏலத்தின் போது பங்கேற்பது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கவலை அளிக்கும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதியன்று நடைபெறவுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலமானது நடைபெறவுள்ளது.
இதற்காக அனைத்து அணிகளும் தங்களது கடைசி கட்ட வியூகங்களை வகுத்து வருகின்றனர். இந்த முறை எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் ப்ளேயிங் 11ல் உள்ள காலி இடங்களை நிரப்பி வருகின்றனர்.

ஐபிஎல் மினி ஏலம்
இதில் மிக முக்கிய அணியாக பார்க்கப்படுவது சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகும். எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை அணி கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் 9வது இடத்தை பிடித்து மோசமாக வெளியேறியது. இந்த முறை தோனியின் கடைசி தொடராக இருக்கும் என்பதால் கோப்பையை வென்றே தீர வேண்டும் என கடும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது.

பெரிய பின்னடைவு
இந்நிலையில் இதில் தான் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதாவது ஐபிஎல் ஏலத்தின் போது வழக்கமாக தோனி முன்கூட்டியே பலதரப்பு வியூகங்களை வகுத்துக் கொடுத்து விடுவார். எந்தெந்த வீரர்கள் வேண்டும் என்றும் அவர் பட்டியலிட்டு கொடுத்து விடுவார். அதனை ஏலத்தின் போது பயிற்சியாளர்கள் போட்டியை பொறுத்து மாற்று ஏற்பாடு செய்து வாங்கிக்கொடுப்பார்கள்.

என்ன நடந்தது
ஆனால் இந்த முறை ஏலத்தின் போது சிஎஸ்கேவின் பயிற்சியாளர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் எனத்தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஸ்டீஃபன் ப்ளெம்மிங், மைக்கெல் ஹசி, எரிக் சிம்மன்ஸ், புதிதாக நியமிக்கப்பட்ட பவுலிங் கோச் டுவைன் பிராவோ என யாருமே டெஸ்கில் இருக்க மாட்டார்கள் எனக்கூறப்பட்டுள்ளது. இதனால் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

என்ன காரணம்
சென்னை அணியில் உள்ள பெரும்பாலான பயிற்சியாளர்கள் அயல்நாட்டை சேர்ந்தவர்கள் தான். லக்ஷ்மிபதி பாலஜி சமீபத்தில் மாற்றப்பட்டார். அயல்நாட்டவர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே அதற்காக அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications