Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி - ஆட்டம் 40 ஓவர்களாக குறைப்பு.. அதிரடி மாற்றம்

லக்னோ : இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் தலா 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதனையடுத்து டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. ஏனென்றால் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால், இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு, டக் வொர்த் லூயிஸ் விதி உதவியாக அமையலாம்.

ஆம் என்ன இலக்கை துரத்தப்போகிறோம் என்று தெரிந்துவிடும். மேலும் மழையால் ஆடுகளம் கவரால் மூடப்பட்டு இருந்தது.

40 ஓவர்

40 ஓவர்

இதனால், முதலில் பந்துவீசும் அணிக்கு பந்து கூடுதலாக சவாலாக இருக்கும். இன்றைய ஆட்டத்தில் 40 ஓவர் என்பதால், ஒவ்வொரு வீரரும் அதிகபட்சமாக 8 ஓவர்கள் வீசலாம். முதல் பவர்பிளே 8 ஓவர்கள்க குறைக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் ராகுல் திரிபாதி அல்லது ரஜத் பட்டிதாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

யாருக்கு வாய்ப்பு

யாருக்கு வாய்ப்பு

ஆனால் இருவருக்கும் வாய்ப்பு தராமல், இஷான் கிஷனை வைத்து அணியை கட்டமைத்துள்ளார் ஷிகர் தவான். அதன் படி, சுப்மான் கில் தொடக்க வீரராக களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் 3வது வீரராக களமிறங்குவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இஷான் கிஷன் நடுவரிசையில் 4வது வீரராகவும், ஸ்ரேயாஸ் ஐயர் 5வது வீரராகவும், சஞ்சு சாம்சன் ஆறாவது வீரராகவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

இதே போன்று 7வது வீரராக ஆல்ரவுண்டர் ஷாபாஸ் அகமது களமிறங்குகிறார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதே போன்று தீபக் சாஹருக்கு இன்றைய ஆட்டத்தில் ஓய்வு வழங்கப்பட்டு, முன்னாள் சிஎஸ்கே வீரர் சர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்துவீச்சாளராக ரவி பிஸ்னாய், குல்தீப் யாதவ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, ஷிகர் தவான், 2, சுப்மான் கில், 3, ருத்துராஜ் கெய்க்வாட், 4, இஷான் கிஷன், 5, ஸ்ரேயாஸ் ஐயர், 6, சஞ்சு சாம்சன், 7, ஷர்துல் தாக்கூர், 8, முகமது சிராஜ், 9, ஆவேஷ் கான், 10, குல்தீப் யாதவ், 11, ரவி பிஸ்னாய்

Story first published: Thursday, October 6, 2022, 16:30 [IST]
Other articles published on Oct 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+