“எங்களை எதிர்கொள்ளும் தகுதி உங்களுக்கு இல்லை”.. இங்கிலாந்துடனான படுதோல்வி.. சோயிஃப் அக்தர் கிண்டல்!
அடிலெய்ட்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோற்றது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிஃப் அக்தர் மோசமாக விமர்சித்துள்ளார்.
அடிலெய்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 169 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்த போதும், மோசமான பந்துவீச்சு காரணமாக ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் தோல்வியடைந்தது.

இந்திய அணி தோல்வி
இந்த தொடரில் லீக் சுற்றில் தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்த இந்திய அணி, அசுர பலத்தில் இருந்த போதும், அரையிறுதியில் தோற்று அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் பாகிஸ்தான் அணியோ கடைசி நேரத்தில் அரையிறுதிக்கு முன்னேறிய போதும், இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது. இதனால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

சோயிஃப் விமர்சனம்
இந்நிலையில் இந்தியாவின் தோல்வி குறித்து சோயிஃப் அக்தர் கிண்டலடித்துள்ளார். அதில்,"இந்திய அணிக்கு இது மோசமான தோல்வியாகும். அவர்கள் தோற்பதற்கு தகுதியானவர்கள் தான். இறுதிப்போட்டிக்கு செல்லவும் தகுதியில்லை. இந்தியாவின் மோசமான பவுலிங் இதன் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் குழப்பம்
அடிலெய்ட் பிட்ச்-ன் தன்மை இந்திய பந்து வீச்சுக்கு உகந்தது தான். எனினும் இந்தியாவிடம் நல்ல வேகத்தில் வீசக்கூடிய பவுலர் கிடையாது. மேலும் சஹாலை அவர்கள் ஏன் எந்த ஒரு போட்டியிலும் பயன்படுத்தவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. இந்தியாவின் வீரர்கள் தேர்வில் நான் இன்னும் குழப்பத்தில் தான் இருக்கிறார்கள் எனக்கூறியுள்ளார்.

ரசிகர்களின் கோபம்
பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியிருக்க வேண்டியது. அப்போது இன்று பாகிஸ்தான், நாளை இந்தியா வெளியேறும் எனக்கூறினர். அதன்பின்னர் பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு வந்தவுடன் இந்தியாவுடன் அதில் மோத வேண்டும் எனக்கூறினர். தற்போது ஆணவத்தில் பேசுவது போல இந்திய அணியை குறைக்கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications