Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பெர்த்-ல் 170 ஸ்ட்ரைக் ரேட் அவ்ளோ ஈசி இல்ல” சூர்யகுமார் மட்டும் கலக்கியது எப்படி.. சோயிப் புகழாரம்

பெர்த்: சூர்யகுமார் யாதவை போல ஒரு வீரரை பார்த்ததே இல்லையென்றும், அவரின் வெற்றிக்கு என்ன டெக்னிக் பயன்படுத்துகிறார் எனவும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் மாலிக் கூறியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கடைசி வரை போராடியும் இந்திய அணி 3 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியடைந்தது.

இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது, இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் சொதப்பியது தான். லுங்கி இங்கிடி வீசிய ஓவர்களில் ஸ்டார் வீரர்கள் சரிந்தனர்.

சூர்யகுமார் யாதவ் அதிரடி

சூர்யகுமார் யாதவ் அதிரடி

நல்ல ஃபார்மில் இருக்கும் விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரே சொதப்பிய போதும், இந்தியாவை ஒரு நல்ல இலக்கிற்கு கொண்டு சென்றது சூர்யகுமார் யாதவ் தான். பவுலிங்கிற்கு சாதகமான பெர்த் மைதானத்தில் மற்ற வீரர்கள் திணறிய போதும், சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான அதிரடியை காட்டினார். 40 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 68 ரன்களை விளாசினர்.

சோயிப் புகழாரம்

சோயிப் புகழாரம்

இந்நிலையில் சூர்யகுமாரின் ஆட்டத்தை பார்த்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் மாலிக் அசந்துப்போயுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், என்னைப்பொறுத்தவரையில் சூர்யகுமார் தான் சிறந்த மிடில் ஆர்டர் டி20 பேட்ஸ்மேன். அவர் ஆடியதை போன்ற ஒரு இன்னிங்ஸை நான் பார்த்ததே இல்லை. இக்கட்டான சூழலில், அதுபோன்ற டஃப் பவுலிங்கில், கடினமான பிட்ச்-ல் 170 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஒருவர் விளையாடுவது சாதாரணம் அல்ல.

வெற்றியின் ரகசியம்

வெற்றியின் ரகசியம்

சூர்யகுமார் பந்து எங்கு பிட்ச் ஆக போகிறது, பேட்டின் எந்த இடத்தில் அந்த பந்து படும் என்பது வரை நன்கு அறிந்து வைத்து ஆடுகிறார். அவரின் வெற்றிக்கு காரணம், ஒரே மாதிரியான ஆட்டம் தான். எப்படிப்பட்ட சூழல் வந்தாலும், அதே அதிரடியுடன் ஆடுகிறார். களத்தின் தன்மை, பவுலர்களின் மனநிலை ஆகியவையை நன்கு அறிந்துவைத்துள்ளார்.

டிவில்லியர்ஸின் திறமை

டிவில்லியர்ஸின் திறமை

பவுலர்கள் அடுத்து எந்த பந்து போடப்போகிறார்கள்? ஆஃப் சைட்டா? லெக் சைட்டா? என்பதை ஏ.பி.டிவில்லியர்ஸ் நன்கு அறிந்து வைத்து ஆடுவார். அதே போன்று தான் தற்போது சூர்யகுமார் யாதவ் விளங்குகிறார் என சோயிப் மாலிக் புகழ்ந்துள்ளார். முன்னாள் வீரர்கள் பலரும் சூர்யகுமாரை டிவில்லியர்ஸுடன் ஒப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, October 31, 2022, 18:33 [IST]
Other articles published on Oct 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+