For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓய்வு பெறப் போகிறேன்... சானியா கணவர் சோயப் மாலிக் திடீர் அறிவிப்பு

Recommended Video

ஒருநாள் தொடரில் இருந்து ஒய்வு பெற இருப்பதாக சோயப் மாலிக் திடீர் அறிவிப்பு- வீடியோ

கராச்சி: பாகிஸ்தான் ஆல் ரவுண்டரும், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் கணவருமான சோயப் மாலிக் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளுடன் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் கூட, தனது உடல் தகுதியை பொறுத்து டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது 36 வயதாகும் மாலிக், கடந்த 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். பாகிஸ்தான் அணிக்காக ஒருநாள் ,டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு

மாலிக், டெஸ்ட் போட்டிகளில் இருந்து 2015 ஆம் ஆண்டு ஓய்வு பெற்று விட்டார். பாகிஸ்தான் அணிக்காக ஒட்டுமொத்தமாக 56 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். இதில் 36 வெற்றிகளும் 18 தோல்விகளும் அடங்கும்.

ஒரு நாள் போட்டி சாதனை

ஒரு நாள் போட்டி சாதனை

சோயப் மாலிக் மொத்தம் 261 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 6975 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 9 சதங்கள் ,41 அரைசதம் மற்றும் 154 விக்கெட்கள்.

டெஸ்ட் போட்டிகள்

டெஸ்ட் போட்டிகள்

டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை மாலிக் ஆடியது 35 போட்டிகள். எடுத்த ரன்கள் 1898. இதில் 3 சதங்கள் 8 அரைசதம் அடக்கம். வீழ்த்திய விக்கெட்கள் எண்ணிக்கை 32 ஆகும்.

 98 டி20 போட்டிகள்

98 டி20 போட்டிகள்

சர்வதேச டி20 போட்டிகளில் மொத்தம் 98 போட்டிகளில் ஆடி 1989 ரன்களைக் குவித்துள்ளார் மாலிக். இதில் 7 அரை சதங்கள் அடக்கம். 28 விக்கெட்களையும் அவர் வீழ்த்தியுள்ளார்.

இலக்கை நோக்கிய ஓட்டம்

இலக்கை நோக்கிய ஓட்டம்

ஓய்வு குறித்து மாலிக் கூறுகையில், நீங்கள் உங்களுக்கான இலக்கை நிர்ணயித்துக்கொண்டால் அதனை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். நான் எனது குறிக்கோளை நோக்கி கடுமையாக ஓடிக்கொண்டிருக்கிறேன். அது என்னவென்றால் 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்வதேயாகும். நாங்கள் இதற்கு முன்னால் இரண்டு பெரிய கோப்பைகளை வென்றுள்ளோம். டி20 உலகக்கோப்பை (2009) மற்றும் சாம்பின்ஸ் டிராபி (2017). என் வாழ்வில் நான் பெறாத ஒரே கோப்பை 50 ஓவர் உலகக்கோப்பை. எங்களது அணியில் உள்ள இளம் வீரர்கள் மீது அதிக நம்பிக்கை உள்ளது. எங்களால் முடிந்த அளவு சிறப்பாக விளையாடுவோம் என்றார் மாலிக்.

Story first published: Tuesday, June 26, 2018, 15:23 [IST]
Other articles published on Jun 26, 2018
English summary
Pakistan player Shoaib Malik has announced that he will retire from ODIs after 2019 WC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+