For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணியில் அவரு இருக்கிறாரு... ஜாக்கிரதை.! நியூசி.க்கு வார்னிங் கொடுத்த முன்னாள் கேப்டன்

Recommended Video

World Cup 2019 : Ind Vs Nz : இந்தியா குறித்து நியூசி.க்கு வார்னிங் கொடுத்த முன்னாள் கேப்டன்- வீடியோ

லண்டன்: இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்துகளை கவனமாக எதிர் கொள்ள வேண்டும் என்று நியூசிலாந்து அணிக்கு முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி அறிவுறுத்தி உள்ளார்.

மான்செஸ்டரில் நாளை நடக்கும் உலக கோப்பை போட்டியின் அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந் நிலையில், பும்ராவின் பந்துவீச்சு குறித்து நியூசி. அணி முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி கட்டுரை ஒன்றை தீட்டியிருக்கிறார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: எட்ஜ்பாஸ்டனில் இந்தியா, இங்கிலாந்து மோதிய ஆக்ரோஷ ஆட்டம் நியூசிலாந்துக்கு நினைவிருக்கும்.

அடித்தது லக்.. இந்தியா பக்கம் வீசும் காற்று.. செமி பைனலில் கலக்க இதை விட வேறு வாய்ப்பு கிடைக்காது! அடித்தது லக்.. இந்தியா பக்கம் வீசும் காற்று.. செமி பைனலில் கலக்க இதை விட வேறு வாய்ப்பு கிடைக்காது!

பெரிய இலக்கு அவசியம்

பெரிய இலக்கு அவசியம்

இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய இலக்கை நியூசிலாந்து நிர்ணயிக்க வேண்டும். அது தான் அணிக்கு பாதுகாப்பானது. இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பவுலிங், விளையாட முடியாத அளவுக்கு இருக்கிறது. பேட்ஸ் மேன்கள் திணறுகின்றனர்.

எச்சரிக்கை வேண்டும்

எச்சரிக்கை வேண்டும்

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் குறைவான ரன்களை வழங்கி இருக்கிறார். எதிரணியின் எந்த வீரரையும் விடவில்லை. எனவே, நியூசிலாந்து அணியினர் பும்ரா பவுலிங் போடும் போது எச்சரிக்கையுடன் ஆட வேண்டும். டெத் ஓவர்களில் ஷமி நன்றாக பந்து வீசுகிறார். பேட்டிங்கிலும் இந்திய அணி வலுவாக இருக்கிறது.

தொடக்க விக். அவசியம்

தொடக்க விக். அவசியம்

எனவே, நியூசி. ஆக்ரோஷமான, சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினால் மட்டுமே மிகப்பெரிய ஸ்கோரை இலக்காக வைக்க முடியும். இந்திய அணியின் தொடக்க வீரர்களை விரைவாக வீழ்த்திவிட வேண்டும். ஏன் என்றால் பேட்டிங்கின் ஆரம்பத்தில் நிதானமாகவும், பின்னர் அதிரடியாகவும் இந்திய அணியினர் ஆடுகின்றனர்.

ஐபிஎல் உதவும்

ஐபிஎல் உதவும்

நமது அணி வீரர்கள் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் விளையாடி இருக்கின்றனர். அதிலும் போல்டுக்கு இந்திய அணியை பற்றி நன்றாக தெரியும். குறிப்பாக ஐபிஎல்லில் விளையாடிய போல்ட், கேன் வில்லியம்சன் ஆகியோருக்கு இந்திய பேட்ஸ் மேன்களின் பலவீனம், பலம் தெரியும். ஆக்ரோஷ பந்துவீச்சு, விரைவான விக்கெட்டுகள், இதை செய்யாவிட்டால் அணிக்கு கஷ்டம் என்று கூறியிருக்கிறார்.

17 விக். வீழ்த்தியவர்

17 விக். வீழ்த்தியவர்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது 8 ஆட்டங்களில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரின் எக்னாமி ரேட் 4 ரன்கள் அளவில்தான் இருக்கிறது. அனைத்து அணிகளுக்கும் அச்சுறுத்தல் பவுலராக பும்ரா இருந்து வருகிறார்.

Story first published: Monday, July 8, 2019, 15:40 [IST]
Other articles published on Jul 8, 2019
English summary
Should be very cautious about Jasprit bumrah former player Vettori warns newzealand.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X