Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரன் எடுக்க முடியாமல் தடுமாறும் சுரேஷ் ரெய்னா... 'வெளிவாசல்' காத்திருக்கிறது?

நேப்பியர்: நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியிலும் சுரேஷ் ரெய்னா தொடர்ந்து சோபிக்காமல் போனது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2 ஆண்டுகாலமாக சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் கோஹ்லி. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 123 ரன்களைக் குவித்து வழக்கம் போல அதிரடியைக் காட்டினார் கோஹ்லி.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கோஹ்லி குவித்திருக்கும் 18வது சதம் இது. ஆனால் இந்திய அணியில் 8 ஆண்டுகளாக விளையாடி வரும் சுரேஷ் ரெய்னா ஒருநாள் போட்டிகளில் ரன்குவிக்க முடியாமல் திணறுவதை நேற்றைய போட்டியிலும் பார்க்க முடிந்தது.

ரெய்னா சொதப்பல்

ரெய்னா சொதப்பல்

சுரேஷ் ரெய்னாவுக்கு கேப்டன் டோணி மற்றும் தேர்வுக் கமிட்டியின் ஆதரவு இருக்கத்தான் செய்கிறது. அதற்காக இப்படி சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினால் விரைவில் இந்திய அணியில் இருந்து வெளியேற வேண்டிய நிலைமைதான் ரெய்னாவுக்கு வரும்.

39 ஐ தாண்டாத ரெய்னா

39 ஐ தாண்டாத ரெய்னா

கடந்த ஓராண்டுகாலமாகவே ரன்களை எடுக்க ரெய்னா தடுமாறி வருகிறார். கடந்த 10 போட்டிகளில் அவரது அதிகபட்ச ரன் 39 தான் நேற்றும் கூட 18 ரன்களைத்தான் எடுத்திருந்தார் ரெய்னா.

28 போட்டிகளில்..

28 போட்டிகளில்..

கடந்த ஜூன் மாதம் முதல் 28 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் ரெய்னா 462 ரன்களை எடுத்திருக்கிறார். இதில் 2013-ல் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரே ஒரு அரைசதமும் உண்டு. ஆனால் ஒரு சதம் கூட இல்லை.

187 போட்டிகள்..

187 போட்டிகள்..

மொத்தமாக 187 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் ரெய்னா 4530 ரன்களைக் குவித்திருக்கிறார்.

3 சதம்

3 சதம்

இந்த 8 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் 3 சதம் மட்டுமே அடித்திருக்கிறார் ரெய்னா. 29 அரைசதங்களையும் எட்டி இருக்கிறார்.

உலகக் கோப்பை போட்டி நெருங்குது..

உலகக் கோப்பை போட்டி நெருங்குது..

அடுத்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் ரெய்னா தொடர்ந்தும் இப்படியே ஆடினால் நிச்சயம் அவரை இந்திய கிரிக்கெட் அணிக்கான தேர்வுக் குழு' வெளிவாசல்' வழியே விடை கொடுத்து அனுப்பி விடும்.

Story first published: Monday, January 20, 2014, 15:39 [IST]
Other articles published on Jan 20, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+