சரியான காம்பினேஷன்ல போய்க்கிட்டு இருக்கு... அதை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது... அஞ்சுப் சோப்ரா உறுதி!
டெல்லி : இந்தியாவின் கேப்டனாக விராட் கோலியும் துணை கேப்டனாக அஜிங்க்யா ரஹானேவும் உள்ள காம்பினேஷன் சிறப்பாக உள்ளதாக முன்னாள் இந்திய கேப்டன் அஞ்சும் சோப்ரா தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு அதை எந்தவகையிலும் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் அணியில் பிளவு ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் விராட் கோலியும் அஜிங்க்யா ரஹானேவும் சிறந்த நண்பர்கள் என்றும் அவர்கள் இருவரும் இந்திய அணியின் வெற்றிக்காக சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோசமான தோல்வி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. இதையும் சேர்த்து கடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர் தோல்விகளை அடைந்துள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

ரஹானேவிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்
கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை அஜிங்க்யா ரஹானே தலைமையிலான இந்திய அணி வெற்றி கொண்டுள்ள நிலையில் ரஹானேவிடம் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை கொடுக்க வேண்டும் என்றும் மூத்த கிரிக்கெட் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொந்தரவு செய்யக்கூடாது
இந்நிலையில் இந்திய கேப்டனாக விராட் கோலியும் துணை கேப்டனாக ரஹானேவும் உள்ள தற்போதைய காம்பினேஷனை தற்போதைக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்று முன்னாள் இந்திய மகளிர் அணியின் கேப்டன் அஞ்சும் சோப்ரா வலியுறுத்தியுள்ளார். இதில் மாற்றத்தை கொண்டுவந்தால் அணியில் பிளவு ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறந்த நண்பர்கள்
விராட் கோலி மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் மிகச்சிறந்த நண்பர்கள் என்பதை சுட்டிக் காட்டியுள்ள அஞ்சும் சோப்ரா, அவர்கள் இருவரும் இந்திய அணிக்காக விளையாடுவதாகவும், பொறுப்புகள் முக்கியமானதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். வரும் காலங்களில் எதுவும் நடக்கலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications