Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியை போல் 31 வயது வீரர் பேட்டிங் செய்கிறார்.. இது வேற லெவல்.. அஸ்வின் பாராட்டு

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடிய விதம் அபாரமாக இருந்ததாக இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி தொடரைச் சமன் செய்தது.

இப்போட்டியில் 71 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 66 ரன்கள் எடுத்த ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலியுடன் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தார். விராட் கோலியும் தன் பங்கிற்கு 66 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் குவித்து அசத்தினார்.

Shreyas Iyer

இது குறித்து பேசிய அஸ்வின், "ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் மிகவும் தரமாக இருந்தது. விராட் கோலியுடன் இணைந்து விளையாடும் போது, அவரை விட மற்றொருவர் சிறப்பாக விளையாடினார் என்று கூறுவது மிகவும் கடினம். ஆனால், இந்த ஆட்டத்தில் விராட் கோலிக்கு நிகராக ஸ்ரேயாஸின் ஆட்டமும் நேர்த்தியாக இருந்தது. இது இந்திய கிரிக்கெட்டிற்கு ஒரு சிறந்த நல்ல அறிகுறி" என்று தெரிவித்தார்.

"50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விராட்டை ஏன் நாம் ஒரு சிறந்த வீரர் என்று அழைக்கிறோம்? ஏனெனில் அவர் இலக்கை மிகச் சரியாகக் கணிக்கக் கூடியவர். அவரது விக்கெட் விழுந்ததும், அனுபவமில்லாத இந்திய பேட்டிங் வரிசைக்கு ஆட்டம் மிகவும் கடினமாகிவிட்டது. வாஷிங்டன் சுந்தரின் காயம் பற்றி எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவராலோ, துபே மற்றும் அக்சர் படேலாலோ களத்தில் நிலைத்து நிற்க முடியவில்லை.

இந்த ஆடுகளத்தில் விராட்டின் விக்கெட் மிகவும் முக்கியமானது. இங்கு எல்லாராலும் எளிதாக விளையாடிவிட முடியாது. இந்தியா 250-260 ரன்கள் எடுத்திருந்தால், இங்கிலாந்துக்கு அது கடைசி ஓவர் வரை செல்லும் கடினமான ஆட்டமாக இருந்திருக்கும்" என்று அஸ்வின் கூறினார்.இறுதியில், இந்திய அணி போதிய ரன்கள் குவிக்காத நிலையில், இங்கிலாந்து அணி 44.1 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

"சுப்மன் கில்லை நான் பாராட்ட விரும்புகிறேன். விராட் கோலி நன்றாக விளையாடினார் என்பது உண்மைதான். ஆனால், கில் பேட்டிங் செய்த விதம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அவர் தவறவிட்ட பந்து என்று எதுவுமே இல்லை. அவர் சிறந்த ஃபார்மில் இருக்கிறார், இது இந்தியாவுக்குப் பெரிய சாதகம். அவர் ஆட்டமிழந்த பந்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பெரும்பாலான நாட்களில் அந்த பந்து கவர் திசையில் பவுண்டரியாக மாறியிருக்கும்" என்று அவர் கூறினார்.

சமீபகாலமாக ஒருநாள் போட்டிகளில் கில் மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளார். முதல் போட்டியிலும் அவர் 75 பந்துகளில் 80 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறி, சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, July 18, 2026, 11:29 [IST]
Other articles published on Jul 18, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+