ஸ்ரேயாஸ்க்கு எங்கேயோ மச்சம் இருக்கு.. போல்ட் ஆகியும் ஆட்டமிழக்காத அதிசயம்.. ஷாக் ஆன வங்கதேசம்
சட்டோகிராம் : வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்டின் போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு செம லக் ஒன்று கிடைத்தது.
தைரியமாக இருப்பவர்களுக்கு தான் லக் வேலை செய்யும் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அப்படி தான் ஒரு சம்பவம் இன்று நடந்தது.
ஸ்ரேயாஸ் ஐயருக்கு 2022ஆம் ஆண்டு ஒரு நல்ல ஏற்றத்தை கொடுத்துள்ளது. என்ன தான், ஸ்ரேயாஸ் ஐயரை ஸ்ரீகாந்த் போன்றோர் கடுமையாக விமர்சித்தாலும், அவர் அதற்கு பேட்டிங்கில் பதிலடி கொடுத்து தான் வருகிறார்.

அதிக ரன்கள்
அவ்வளவு ஏன் ஸ்ரேயாஸ் ஐயர், நடப்பாண்டில் டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் கூட இடம்பெறவில்லை. இருப்பினும், இந்த ஆண்டில் சர்வதேச கிரிககெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றார். இந்தியா 112 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்த நிலையில் ஸ்ரேயாஸ் களத்திற்கு வந்தார்.

பார்ட்னர்ஷிப்
அப்போது, ஸ்ரேயாஸ் புஜாராவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து, நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். ஒரு கட்டத்தில் வங்கதேச பவுலர்களை செட்டில் ஆக விடாமல், ஸ்ரேயாஸ் ரன்களை குவித்த வண்ணம் இருந்தார். இதன் மூலம் ஸ்ரேயாஸ் ஐயா அரைசதம் கடந்தார்.

அதிர்ஷ்டம்
ஆட்டத்தின் கடைசி மணி நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்கள் என்ற நிலையில் இருந்த போது எபதாட் ஹூசைன் பந்தில் அவர் போல்ட் ஆனார். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஸ்டம்பில் இருந்த எல் இ டி பைல்ஸ் ஒளிர்ந்தும் , பைல்ஸ் கீழே விழவில்லை. இதனை பார்த்து வங்கதேச பவுலர்கள் ஷாக் ஆகி நின்றனர்.

விதி என்ன?
கிரிக்கெட் விதிப்படி போல்ட் ஆகும் போது எதேனும் ஒரு பைலஸ் கீழே விழுந்தால் தான் அது அவுட் என்று அறிவிக்கப்படும். ஆனால் ஸ்ரேயாஸ்க்கு பைல்ஸ் கீழே விழாத நிலையில், அவருக்கு செம லக் கிடைத்தது. தற்போது நாளை அஸ்வினுடன் சேர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தால் தான், இந்தியாவுக்கு சாதகமான சூழல் ஏற்படும்.


Click it and Unblock the Notifications