For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை!!

இந்தூர் : இந்திய அளவிலான சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்டின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.

மும்பை - சிக்கிம் இடையே ஆன டி20 போட்டியில் மும்பை வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடி 55 பந்துகளில் 147 ரன்கள் குவித்தார்.

அதிக டி20 ரன்

அதிக டி20 ரன்

இதன் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர், டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை புரிந்துள்ளார். இதற்கு முன் 2018 ஐபிஎல்-இல் ரிஷப் பண்ட் 128 ரன்கள் அடித்து இருந்ததே இந்தியர் ஒருவர் அடித்த அதிக டி20 ரன்னாக இருந்தது.

அடுத்த இடங்களில்..

அடுத்த இடங்களில்..

மூன்றாவது இடத்தில் முரளி விஜய் 2010 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 127 ரன்கள் இடம் பெற்றுள்ளது. நான்காவது இடத்தில் சுரேஷ் ரெய்னா உத்தரபிரதேச அணிக்காக அடித்த 126 ரன்களும், டெல்லி மாநில அணிக்காக உன்முக்த் சந்த் அடித்த 125 ரன்களும் இடம் பெற்றுள்ளன.

இடம் இல்லை

இடம் இல்லை

ரிஷப் பண்ட் இந்திய அணியின் இடம் பிடித்து விட்ட நிலையில், அவருடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக ரன் குவித்தும் அணியில் தொடர்ந்து இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

குறைந்த வாய்ப்பு

குறைந்த வாய்ப்பு

ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை 6 டி20 மற்றும் 6 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடியுள்ளார். எனினும், தொடர்ந்து அணியில் இடம் பெற முடியவில்லை. கடைசியாக 2017 நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இடம் பெற்று இருந்தார்.

ஐபிஎல் தொடரில் என்ன செய்வார்?

ஐபிஎல் தொடரில் என்ன செய்வார்?

அடுத்து ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. அதிலும், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ரன் குவித்தால், உலகக்கோப்பைக்கு பின் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு கிடைக்கலாம்.

Story first published: Friday, February 22, 2019, 12:59 [IST]
Other articles published on Feb 22, 2019
English summary
Shreyas Iyer breaks a record of Rishabh Pant in T20s and holds the highest T20 score record by an Indian batsmen.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X