Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு திரும்பும் நட்சத்திர வீரர்.. பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. யார் இடத்திற்கு ஆபத்து

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் வலு இழந்து காணப்படும் நிலையில் தற்போது ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கடினமான ஆடுகளத்தில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் எடுத்தது.

இருப்பினும் ரோகித் சர்மா,ஜடேஜா, அக்சர்பட்டேல் என மூன்று வீரர்களுக்கு தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

உடல்தகுதி

உடல்தகுதி

குறிப்பாக புஜாரா, விராட் கோலி ஆகியோர் மோசமான ஷாட்டை ஆடி தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்த நிலையில் பிசிசிஐ விடுத்துள்ள அறிக்கையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், தனது உடல் தகுதியை எட்டி விட்டதாக தெரிவித்துள்ளார். ஸ்ரேயாஸ் ஐயரை சோதித்த மருத்துவ குழு அவர் கிரிக்கெட் போட்டியில் மீண்டும் விளையாட அனுமதி அளித்துள்ளது.

அணிக்கு திரும்புகிறார்

அணிக்கு திரும்புகிறார்

இதன் காரணமாக டெல்லியில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட்டில் ஸ்ரேயாஸ் இணைய உள்ளதாக பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் சுழல் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்வார் என்பதால் இது இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக கருதப்படுகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் பிளேயிங் லெவனின் விளையாடினால் யாருடைய இடத்திற்கு ஆபத்து என்பதை தற்போது பார்க்கலாம்.

யார் இடத்திற்கு ஆபத்து

யார் இடத்திற்கு ஆபத்து

முதல் ஆபத்து சூரியகுமாருக்கு தான். அதற்கு காரணம் டி20 வீரராக அறியப்பட்ட அவரை டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா சேர்த்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவு பெரிய ரன்களை சேர்க்கவில்லை. இதன் காரணமாக அறிமுக டெஸ்டில் விளையாடிய சூரியகுமார் யாதவ், அடுத்த டெஸ்ட் போட்டியில் அணியை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே போன்று இரண்டாவது ஆபத்து அணியின் துணை கேப்டனாக இருக்கும் கே எல் ராகுலுக்கு தான். ராகுலை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக சுப்மன் கில்லை சேர்க்க அணி நிர்வாகம் முடிவு எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இப்படி செய்யுமா?

இப்படி செய்யுமா?

ஏனென்றால் கே எல் ராகுலை சேர்த்ததன் மூலம் அவ்வளவு பெரிய விமர்சனங்களை ரோகித்தும் ராகுல் டிராவிட்டும் சந்திக்கின்றார்கள். இல்லையென்றால் மூன்றாவது ஆபத்து கே எஸ் பரத்துக்கு தான். கேஎல் ராகுலுக்கு விக்கெட் கீப்பிங் தெரியும் என்பதால் பரத்தை தூக்கி விட்டு அந்த இடத்தில் ராகுலை களமிறக்கலாம். ஸ்ரேயாஸ் , ராகுல் என நடுவரிசை பலமாக காட்சி அளிக்கும். எனினும் இப்படி அதிரடி முடிவுகளை எல்லாம் இந்திய அணி நிர்வாகம் எடுக்க வாய்ப்பில்லை.

Story first published: Tuesday, February 14, 2023, 21:07 [IST]
Other articles published on Feb 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+