Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பந்தை எதிர்கொள்ள இப்படியா பயப்படுவது ? ஸ்ரேயாஸ் ஐயர் மீது பெரும் குறை.. எதிர்காலமே பாதிக்கும்

லக்னோ : இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பெரும் ஸ்டாராக வருவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுவது ஸ்ரேயாஸ் ஐயர் தான்.

பேட்டிங்கில் புயல் போல் சர்வதேச கிரிக்கெட்டில் மையம் கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது டி20 உலககோப்பையில் மெயின் அணியில் கூட இல்லை.

இதற்கு காரணம் ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங்கில் இருக்கும் ஒரே குறை தான். அதனை சரி செய்யவில்லை என்றால் அவருடைய பேட்டிங் வாழ்க்கையே போய்விடும்.

பேட்டிங் குறை

பேட்டிங் குறை

கடந்த மார்ச் மாதம், இலங்கைக்கு எதிராக 3 டி20 போட்டியில் ஆட்டமிழக்காமல் 201 ரன்களை ஸ்ரேயாஸ் ஐயர் அடித்தார். ஆனால், அப்போது அவருக்கு இருக்கும் குறை மெல்ல மெல்ல வெளியே தெரிய வர, ஸ்ரேயாஸ் ஐயர் வந்தாலே ஷாட் பால்களை வீசி ஆட்டமிழக்க செய்து விடுகிறார்கள். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் கூட அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

காரணம் என்ன

காரணம் என்ன

பிளிக் ஆடும் ஒரு பந்தை அரைகுறையா ஏதோ அடிக்கப் போய் ஸ்ரேயாஸ் LBW ஆனார். காரணம் தென் ஆப்பிரிக்கா மாதிரியான உலகத்தரமான பந்துவீச்சாளர்கள் இருக்கும் அணியிலிருந்து நிச்சயம் Short ball வீசுவார்கள் என்று எதிர்பார்த்து நின்றதால், flick ஆட வேண்டிய பந்தை ஆட முடியாமல் அவுட் ஆகிவிட்டார்.

தொடரும் கதை

தொடரும் கதை

சமீபத்தில் இங்கிலாந்து டெஸ்ட் மேட்சில் பைன் லெக் பக்கம் கிளான்ஸ் ஆடவேண்டிய பந்துக்கு சரியாக ஆட முடியாமல் அவுட் ஆவார். காரணம் ஷாட் பாலை எதிர்பார்த்து நிற்பதால், பவுன்ஸ் அல்லாமல் வரும் பந்துக்கு ரியாக்ட் செய்யும் நேரம் குறைவாகிறது. இதனால் மிஸ் டைமாகி விக்கெட்டை கொடுக்கிறார்.

சரி செய்வது எப்படி?

சரி செய்வது எப்படி?

இதனை சரி செய்ய வேண்டும் என்றால் ஸ்ரேயாஸ் ஐயர் தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஷாட் பந்தை எதிர்பார்த்து நிற்காமல், ஒவ்வொரு பந்தை எப்படி ஆட வேண்டுமோ, அதனை அப்படி எதிர்கொள்ள வேண்டும். டிராவிட், சச்சின் போன்றோர் தங்களுக்கு ஏதாவது கடினமாக இருந்தால், அதனை பயிற்சி மூலமே சரி செய்து இருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் இதனை மாற்றி கொண்டால் அது அவருடைய எதிர்காலத்துக்கு நல்லது.

Story first published: Thursday, October 6, 2022, 17:34 [IST]
Other articles published on Oct 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+