Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பதவி வந்ததுமே சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்.. விராட் கோலி லெவல் ரெக்கார்டை படைத்து அசத்தல்

போர்ட் ஆப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் நாள் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டார்.

Recommended Video

IND vs WI Nicholas Pooran பிடித்த Brilliant Catch! Shreyas Iyer செய்த சாதனை *Cricket

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு கடைசி இரண்டு போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதே போன்று டி20 தொடரிலும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

வாய்ப்பு

வாய்ப்பு

ஆனால் ஐபிஎல் க்கு முன்பு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் இழக்காமல் 201 ரன்கள் அடித்தார் ,இது இந்திய அணியை பொறுத்தவரை சாதனையாக கருதப்பட்டது. ஆனால் எதிர்பாராத வகையில் இந்திய அணியில் தனது இடத்தை ஸ்ரேயாஸ் ஐயர் இழந்தார். தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டது.

துணை கேப்டன்

துணை கேப்டன்

இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைத்தது. காயம் காரணமாக துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஜடேஜா இந்த போட்டியில் இடம்பெறவில்லை. இதனால் அந்தப் பதவி ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்டது. இதனை அடுத்து ஸ்ரேயாஸ் , தமக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சூப்பராக பயன்படுத்திக் கொண்டு ரன்களை சேர்த்தார்.

சாதனை

சாதனை

மூன்றாவது வீரராக விராட் கோலியின் இடத்தில் களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஆரம்பம் முதலில் இருந்தே அதிரடியை காட்டினார். 57 பந்துகளை எதிர்கொண்ட அவர் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் ஐந்து பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இந்த நிலையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் புது சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். அதில் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக குறைந்த இன்னிங்சில் ஆயிரம் ரன்களைத் தொட்ட இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் பெற்றார்.

பட்டியல்

பட்டியல்

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் விராட் கோலி மற்றும் தவான். இருவரும் தலா 24 இன்னிங்ஸில் ஆயிரம் ரன்களை தொட்டனர். அதன் பிறகு நவஜீத் சிங் சிந்து மற்றும் ஸ்ரேயாஸ் 25 இன்னிங்ஸில் ஆயிரம் ரகளை கடந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் கே.எல் ராகுல் 27 இன்சில் இந்த சாதனையை எட்டியுள்ளார். இதன் மூலம் நடு வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடுகிறார் என்ற பெயரை பெற்றுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் எதிராக மட்டுமே 7 அரை சதங்களை ஸ்ரேயாஸ் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது,

Story first published: Friday, July 22, 2022, 22:58 [IST]
Other articles published on Jul 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+