Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

40 பந்தில் 80 ரன்.. தோனியின் ஷாட்டை அடித்து மிரட்டிய இந்திய வீரர்!

Recommended Video

தோனியின் ஷாட்டை அடித்து மிரட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்

டெல்லி : சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக களமிறங்கி விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பிரத்யேகமான ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்து ரசிகர்களை குஷியாக்கினார்.

இந்தியாவின் நம்பிக்கைக்குரிய இளம் வீரர்களில் ஒருவராக திகழும் ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் 40 பந்துகளில் 80 ரன்களை அடித்து அவர் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்தியாவின் 4வது இடத்திற்கான சரியான தேர்வு ஸ்ரேயாஸ் ஐயர் தான் என்று தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ள நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தன்னுடைய நிலையான வளர்ச்சியை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

 ஸ்ரேயாஸ் ஐயரின் முயற்சி

ஸ்ரேயாஸ் ஐயரின் முயற்சி

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பிரத்யேக ஷாட்டாக ஹெலிகாப்டர் ஷாட் பார்க்கப்படுகிறது. இந்த ஷாட்டை தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் முயற்சி செய்து சாதித்துள்ளது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் விளாசல்

சையத் முஸ்தாக் அலி கோப்பையில் பஞ்சாப் அணிக்கு எதிராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், 4 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகளை அடித்து விளாசியுள்ளார். இதில் அடிக்கப்பட்ட 4 சிக்சர்களில் ஒன்று தோனியின் பிரத்யேக ஹெலிகாப்டர் ஷாட்டாக அடிக்கப்பட்டுள்ளது.

 எதிரணி பந்துவீச்சுக்கு சவால்

எதிரணி பந்துவீச்சுக்கு சவால்

எதிரணியான பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு தன்னுடைய பேட்டிங் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் மிகப்பெரிய சவாலை கொடுத்துள்ளார். 40 பந்துகளில் 80 ரன்களை அடித்து அவர் சாதனை புரிந்துள்ளார்.

 எம்எஸ்கே பிரசாத் கருத்து

எம்எஸ்கே பிரசாத் கருத்து

ஸ்ரேயாஸ் ஐயர் தனது நிலையான வளர்ச்சியை கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடுத்துவரும் நிலையில், அவர் இந்திய அணியின் விவாதத்திற்குரிய 4வது இடத்திற்கு சரியான தேர்வாக இருப்பார் என்று இந்திய தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 தொடர முடியவில்லை - பிரசாத்

தொடர முடியவில்லை - பிரசாத்

கடந்த 18 மாதங்களுக்கு முன்பு சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்கேற்க முடியாமல் விராத் கோலி ஓய்வு எடுத்தபோது, அவருக்கு சரியான மாற்றாக ஸ்ரேயாஸ் ஐயர் இருந்ததை சுட்டிக்காட்டிய பிரசாத், துரதிர்ஷ்டவசமாக அதை நம்மால் தொடர முடியாததையும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

Story first published: Friday, November 29, 2019, 13:38 [IST]
Other articles published on Nov 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+