Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வைபவ் சூர்யவன்ஷியை நீக்கிய காரணம்.. “நான் ஒருத்தன் தான் வலது கை பேட்ஸ்மேன்”.. ஸ்ரேயாஸ் விளக்கம்

சவுதாம்ப்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி நீக்கப்பட்டு, சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம் அளித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 0-4 என்ற கணக்கில் இழந்தது. இத்தொடரின் கடைசிப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார்.

வைபவ் சூர்யவன்ஷியை நீக்கியது குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், "இந்த சூழ்நிலைக்குத் தேவையான சிறந்த கூட்டணியை நாங்கள் தேர்வு செய்ய விரும்பினோம். இடது கை பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மாவுடன் ஒரு வலது கை பேட்ஸ்மேன் களம் இறங்க வேண்டும் என்று நினைத்தோம். அதுவே வைபவ் நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாகும்" என்றார்.

Shreyas Iyer Explains Decision to Drop Vaibhav Suryavanshi and Include Sanju Samson in 5th T20I

மேலும் ஸ்ரேயாஸ் கூறுகையில், "அணியின் முதல் 7 பேட்ஸ்மேன்களில் இருந்த அனைத்து இடது கை பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில், நான் ஒருவன் மட்டுமே வலது கை பேட்ஸ்மேனாக இருந்தேன். இதனால் பேட்டிங் வரிசையில் சமநிலையைக் கொண்டு வர சஞ்சு சாம்சனை மீண்டும் சேர்த்தோம். அவர் ஒரு சிறந்த அதிரடி பேட்ஸ்மேன். கடந்த காலங்களில் இந்திய அணிக்கு பல தொடர்களை வென்று கொடுத்துள்ளார்" என்று சாம்சனுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.

வைபவ் சூர்யவன்ஷி இடது கை பேட்ஸ்மேன், சஞ்சு சாம்சன் வலது கை பேட்ஸ்மேன் இதுதான் மாற்றத்துக்கு காரணம் என்பதை தான் இவ்வாறு கூறி இருக்கிறார். நான்காவது டி20 போட்டியில் மொத்தம் 8 இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தனர். அதை மாற்றவே சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

கம்பீர் முடிவால் தனியாக அமர்ந்து அழுத வைபவ் சூர்யவன்ஷி.. உடைந்து போன சிறுவன்.. என்ன நடந்தது?

கம்பீர் முடிவால் தனியாக அமர்ந்து அழுத வைபவ் சூர்யவன்ஷி.. உடைந்து போன சிறுவன்.. என்ன நடந்தது?

அறிமுகத் தொடரில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, தான் விளையாடிய 3 போட்டிகளில் முறையே 14, 13, 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். குறிப்பாக இரண்டு முறை தனது ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்சின் சக வீரர் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

விராட் கோலியின் மெகா சாதனையை முறியடித்த ஜோஸ் பட்லர்.. சர்வதேச டி20 ரன் குவிப்பில் 3வது இடம்

விராட் கோலியின் மெகா சாதனையை முறியடித்த ஜோஸ் பட்லர்.. சர்வதேச டி20 ரன் குவிப்பில் 3வது இடம்
Story first published: Sunday, July 12, 2026, 11:34 [IST]
Other articles published on Jul 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+