Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"இன்னும் என் பையன் என்ன செய்யனும்?" இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஸ்ரேயாஸ் தந்தை வேதனை

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஆசிய கோப்பை டி20 தொடரில் சேர்க்கப்படாதது ரசிகர்களை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரையும் பாதிக்க வைத்திருக்கின்றது. ஐபிஎல் தொடரில் 2024 ஆம் ஆண்டு சீசனில் கொல்கத்தா அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று தந்த ஸ்ரேயாஸ், 2025 ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்து இறுதிப்போட்டி வரை அணியை அழைத்துச் சென்றார்.

ஆனால் டி20 ஆசிய கோப்பை தொடரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது குறித்து தனது வேதனையை பகிர்ந்து கொண்டுள்ள ஸ்ரேயாஸ் தந்தை சந்தோஷ் ஐயர், இந்திய டி20 அணியில் இடம் பிடிக்க தனது மகன் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

Shreyas Iyer

இது குறித்து பேசிய அவர், ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆண்டும் அவர் சிறப்பாக செயல்படுகிறார். டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் என மூன்று அணிகளையும் கேப்டனாக இறுதிப் போட்டி வரை கொண்டு சென்றிருக்கிறார். அதிலும் கொல்கத்தா அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் வாங்கி கொடுத்திருக்கிறார்.

பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். நான் இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை நியமனம் செய்யுங்கள் என்று கூறவில்லை. குறைந்தபட்சம் அணியில் ஏன் எடுக்காமல் விட்டீர்கள் என்று தான் கேட்கின்றேன். ஆனால் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்றாலும் ஸ்ரேயாஸ், அது குறித்து கவலைப்படவில்லை.

முகத்தில் எந்த ஒரு ரியாக்ஷனையும் அவர் காட்டவில்லை. அவர் எனக்கு போதுமான அதிர்ஷ்டம் இல்லை என்று சொல்லி நகர்ந்துவிட்டார். அணியில் இடம் கிடைக்காத குறித்து ஒன்றும் செய்ய முடியாது. அமைதியாக இருந்து வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்று கூறினார். ஸ்ரேயாஸ் யார் மீதும் பழி போட விரும்பவில்லை .ஆனால் உண்மையில் நிச்சயம் அவருக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும் என்று ஸ்ரேயாஸ் கூறினார்.

ஸ்ரேயாஸ் இதுவரை இந்தியாவுக்காக 51 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 1104 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 30 என்று அளவிடும் ஸ்ட்ரைக் ரேட் 136 என்ற அளவில் இருக்கின்றது. ஸ்ரேயாஸ் விடுபட்டது குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் உதவி பயிற்சியாளருமான அபிஷேக் நாயர் ஸ்ரேயாஸ் ஐயரை, ரிசர்வ் அணியில் கூட சேர்க்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

Story first published: Thursday, August 21, 2025, 13:33 [IST]
Other articles published on Aug 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+