Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூர்யகுமார் கிட்ட இருந்து காப்பத்தனும்.. அடிச்சி பிடிச்சி அப்டேட் கொடுத்த ஸ்ரேயாஸ்.. அவவளவு பயமா?

ராய்ப்பூர் : இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் சனிக்கிழமை ராய்ப்பூரில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் முதுகு வலி காரணமாக நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த தொடரில் இடம் பெறவில்லை.

அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் ஒரு நாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சூரியகுமார் யாதவ் முதல் போட்டியில் 26 பந்துகளில் 31 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

ஸ்ரேயாஸ்க்கு நெருக்கடி

ஸ்ரேயாஸ்க்கு நெருக்கடி

கடந்த ஒரு ஆண்டாக நடு வரிசையில் சிறப்பாக விளையாடி வந்தாலும் கடைசியாக களமிறங்கிய மூன்று போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 94 ரன்கள் மட்டுமே எடுத்தார். இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் அதிகபட்சமாக 38 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்திற்கு நெருக்கடி ஏற்பட்டு வந்தது. தற்போது அவர் காயம் காரணமாக வெளியேறியதால் அந்த இடத்திற்கு சூரியகுமார் யாதவ் வந்துள்ளார்.

ஸ்ரேயாஸ் முயற்சி

ஸ்ரேயாஸ் முயற்சி

சூரியகுமார் தான் நடுவரசையில் விளையாட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது அவசர அவசரமாக ஸ்ரேயாஸ் ஐயர் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் தாம் உடல் தகுதியை விரைவில் எட்டி விடுவேன் என்றும், அணிக்கு விரைவாக திரும்பி விடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது சூரியகுமார் யாதவால் தமது இடம் ஆபத்தில் இருப்பதை உணர்ந்த ஸ்ரேயாஸ் எப்படியாவது 100 சதவீதம் உடல் தகுதியை நிரூபித்து விட்டு அணியில் தொடர வேண்டும் என்று முயற்சியில் களம் இறங்கி இருக்கிறார்.

 இடத்திற்கு ஆபத்து

இடத்திற்கு ஆபத்து

இதனால் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட ஸ்ரேயாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். எனினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளதால் அந்த தொடருக்கு தயாராகுங்கள் என்று தேர்வுக்குழு ஸ்ரேயாஸ் ஐயரிடம் கூறிவிட்டது. இதனால் ஸ்ரேயாஸ் தற்போது சோகத்தில் இருக்கிறார். கஷ்டப்பட்டு ஒரு நாள் போட்டியில் தமது இடத்தை உறுதி செய்த நிலையில் மூன்று போட்டிகளில் சொதப்பியதன் காரணமாக தற்போது அந்த இடம் பறிபோகக்கூடிய சூழ்நிலை வந்து விட்டதாக ஸ்ரேயாஸ் ஐயர் நினைக்கிறார்.

இடது கை பேட்ஸ்மேன்

இடது கை பேட்ஸ்மேன்

சூரியகுமாரை தவிர இசான் கிஷனும் நம்பர் நான்காவது இடத்தில் விளையாடுவது ஸ்ரேயாஸ் ஐயருக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. இஷான் கிஷன் ஏற்கனவே இரட்டை சதம் அடித்திருப்பதால் அவரை அணியில் சேர்க்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இசான் கிஷன், இடது கை பேட்ஸ்மேன் என்பதால் அது கூடுதல் சாதகமாக பார்க்கப்படுகிறது. இதனால் இரண்டு வீரர்களாலும் ஸ்ரேயாஸ் ஐயர் இடத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Story first published: Thursday, January 19, 2023, 21:55 [IST]
Other articles published on Jan 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+