அவர் சூப்பர்... அவர் மட்டும்தான் சூப்பர்... கேப்டனை புகழ்ந்து தள்ளும் ரபடா
துபாய் : டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இளம் வீரராக இருந்தாலும் அணியை முன்னிருந்து சிறப்பாக வழிநடத்துவதாக காகிசோ ரபடா புகழ்ந்துள்ளார்.
ஆன்லைன்மூலம் செய்தியாளர்களிடம் பேசிய ரபடா, ஒரு கேப்டனாக குறிப்பாக வெளிநாட்டு வீரர்களையும் சிறப்பாக வழிநடத்துவது மிகவும் கடினமானது என்றும் அதை அவர் சிறப்பாக செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணி மிகவும் சுதந்திரமான சூழ்நிலையை அணி வீரர்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளதாகவும், அதுவே அதன் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் அவர் மேலும் கூறினார்.

சிறப்பான கேப்டன்
இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது டெல்லி கேபிடல்ஸ். இளம் வீரராக இருந்தாலும் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர். இதே கருத்தையே அணியின் பௌலர் காகிசோ ரபடாவும் தற்போது தெரிவித்துள்ளார்.

வெற்றிக்கு காரணம்
இந்த இளம் வயதில் கேப்டனாக அதுவும் வெளிநாட்டு வீரர்களையும் சிறப்பாக வழிநடத்துவது கடுமையான செயல் என்றும் ரபடா குறிப்பிட்டுள்ளார். மேலும் டெல்லி கேபிடல்ஸ் அணி சுதந்திரமான சூழலை அணி வீரர்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளதாகவும் அதுவும் அதன் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறந்த முடிவுகளை எடுக்கும் ஐயர்
இளம் வீரராக இருந்தாலும் அணியை முன்னிருந்து சிறப்பாக ஷ்ரேயாஸ் ஐயர் வழிநடத்துவதாக ரபடா கூறியுள்ளார். ஒரு கேப்டனாக ஐயரின் செயல்பாடுகள் நம்ப முடியாத அளவில் உள்ளதாகவும் ரபடா கூறியுள்ளார். மைதானத்திற்கு வெளியில் மிகவும் கூலாக செயல்படும் ஐயர், மைதானத்திற்கு உள்ளே சென்றுவிட்டால் கேப்டனாக சிறப்பான முடிவுகளை எடுப்பதாக கூறியுள்ளார்.

துஷாருக்கு ரபடா ஆலோசனை
ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரிக்கி பாண்டிங்கும் சிறந்த வகையில் உதவி புரிவதாகவும் அவர் மேலும் கூறினார். டெல்லி கேபிடல்ஸ் நாளை கேகேஆர் அணியுடன் மோதவுள்ளது. இந்நிலையில், அணியின் துஷார் தேஷ்பாண்டே, தன்னுடைய முந்தைய போட்டிகளில் இருந்து அனுபவங்களை பெற்று சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் ரபடா அறிவுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications