Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த விஷயத்தில் அஸ்வினுக்கு இணையான வீரர் ஸ்ரேயாஸ் ஐயர்.. ராகுல் டிராவிட் கொடுத்த பாராட்டு!

பெங்களூரு: இந்திய அணியின் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இணையான மன உறுதியை ஸ்ரேயாஸ் ஐயர் கொண்டிருப்பதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து நெதர்லாந்து அணி நாளை களமிறங்கவுள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அணி ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், அரையிறுதி சுற்றுக்கு முன்பாக சீனியர் வீரர்கள் சிலருக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்று பார்க்கப்படுகிறது.

Shreyas Iyer have great temperament which is equal to Ravichandran Ashwin says Rahul Dravid

இந்த நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்து ராகுல் டிராவிட் பேசுகையில், இந்திய ஏ அணிக்காக விளையாடிய காலம் முதலே ஸ்ரேயாஸ் ஐயரை பார்த்து வருகிறேன். அவர் வெற்றியையும், தோல்வியையும் சரிக்கு சமமாக பார்த்து வருபவர். அதேபோல் எப்போதெல்லாம் அழுத்தம் அதிகமாக இருக்கிறதோ, இந்திய அணி சிக்கலில் உள்ளதோ அப்போதெல்லாம் ஸ்ரேயாஸ் ஐயர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.

ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஷார்ட் பால்களை எதிர்கொள்வதில் பிரச்சனை இருப்பது பற்றிய கேள்விக்கு, உலகில் யாரும் முழுமையான பேட்ஸ்மேன் கிடையாது. எல்லா பேட்ஸ்மேன்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் முன்னேற்றமடைய வேண்டிய தேவை உள்ளது. எந்த பேட்ஸ்மேனாலும் நான் இந்த பந்தை சிறப்பாக எதிர்கொள்வேன் என்று சொல்லவே முடியாது. என்னை பொறுத்தவரை எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும், முன்னேறி கொண்டே இருக்க வேண்டும்.

Shreyas Iyer have great temperament which is equal to Ravichandran Ashwin says Rahul Dravid

ஆனால் அடிப்படையில் எந்த பவுலர்களுக்கு எதிரான எவ்வளவு ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளது, பேட்ஸ்மேனின் ஆட்டம் உள்ளிட்டவை குறித்து தான் மதிப்பீடு செய்ய முடியும். அதேபோல் பிரஷரான நேரங்களில் ஸ்ரேயாஸ் ஐயரின் ஆட்டம் எப்போதும் சிறப்பாக இருக்கும். அவரின் டெஸ்ட் அறிமுகம் முதற்கொண்டு பல்வேறு இன்னிங்ஸ்களில் இந்திய அணியை மீட்டெடுத்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். இந்திய அணிக்கு 2 ஆண்டுகளாக பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறேன்.

குறிப்பாக வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் ஆட்டம் அற்புதமாக அமைந்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரின் மன உறுதியும் அசாத்தியமான ஒன்றாகும். அதன் காரணமாக தான் அவரால் அழுத்தமான நேரங்களில் சிறப்பாக செயல்பட முடிகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் செயல்படும் பட்சத்தில், ஆட்டத்தில் இறுதியில் அது மிகப்பெரிய பங்களிப்பாக அமையும் என்று கூறியுள்ளார்.

Story first published: Saturday, November 11, 2023, 19:51 [IST]
Other articles published on Nov 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+