150 கிமீ. வேகத்தில் பந்துகளை எதிர்கொள்ளாதவர்கள் எல்லாம் அட்வைஸ் பண்றாங்க.. கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். கடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் ஸ்ரேயாஸ் இந்திய அணியின் பேட்டிங்கில் மிகவும் முக்கியமான வீரராக இருந்தார்.
அதேபோன்று டெஸ்ட் அணியிலும் ஸ்ரேயாஸ் ஐயர் முக்கியமான இடத்தில் இருந்த நிலையில் அண்மையில் டெஸ்ட் போட்டியில் இருந்தும் தனது இடத்தை இழந்தார். இதற்கு காரணம் ஸ்ரேயாஸ் ஷார்ட் பாலை எதிர் கொள்ள தடுமாறுகிறார் என்று பல முன்னாள் வீரர்கள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் ஷார்ட் பாலை எதிர்கொள்ள தான் தடுமாறுவதாக முன்னாள் வீரர்கள் கூறும் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஸ்ரேயாஸ் ஐயர், மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துகளை எதிர்கொள்ளாதவர்கள் எங்களிடம் வந்து ஷார்ட் பாலை எப்படி விளையாட வேண்டும் என்று அட்வைஸ் செய்வதை பார்த்தால் எனக்கு எரிச்சலாக வருகிறது.
ஆனால் அது அவர்களுடைய சொந்த கருத்து. இதைப் பற்றி பேச அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட விஷயங்களை அவர்களுக்குள்ளவே பேச வேண்டுமே, தவிர நேரடியாக வீரரிடம் வந்து நீங்கள் செய்வது தவறு என விமர்சிக்க கூடாது என்று ஸ்ரேயாஸ் காட்டமாக பதில் அளித்துள்ளார். 2023 உலக கோப்பையில் 11 இன்னிங்சில் ஸ்ரேயாஸ், மொத்தமாக 530 ரன்கள் சேர்த்தார்.
இதில் இரண்டு சதம், மூன்று அரை சதம் அடங்கும். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரேயாஸ் இலங்கை அணிக்கு எதிராக நான் அடிக்க 82 ரன்கள் தான் எனக்கு மிகவும் பிடித்தது ஆகும். ஏனென்றால் என்னை அணியை விட்டு நீக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினார்கள். நான் அணிக்காக எந்த நல்லதும் செய்யவில்லை என்று அவர்கள் கூறினார்கள்.
இதேபோன்று பாகிஸ்தானுக்கு எதிராக அரை சதம் அடித்தேன். அது நான் விளையாடியதிலே கடும் நெருக்கடி நிறைந்த இன்னிங்ஸ் ஆகும். என்னை தொடர்ந்து அவமதிக்கும் வகையில் சிலர் பேசியது என்னுடைய உத்வேகத்தை அதிகரித்தது. அது நான் நன்றாக விளையாட உதவியது.
நான் எப்போதுமே என்னுடைய 110 சதவீத பங்களிப்பை அணிக்காக கொடுக்க வேண்டும் என நினைப்பேன். நான் என்னுடைய உள்ளுணர்வை மதித்து விளையாடுவேன். என்னுடைய சொந்த ரசிகனே நான் தான். பாகிஸ்தானுக்கு எதிராக நான் விளையாடிய ஆட்டம் உலகக்கோப்பையில் என்னுடைய உத்வேகத்தை மாற்றியது என்று ஸ்ரேயாஸ் கூறினார்.
Story first published: Tuesday, January 21, 2025, 10:20 [IST]
Other articles published on Jan 21, 2025


Click it and Unblock the Notifications