Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லை மீறிய சாம் கர்ரன்.. எகிறிய ஸ்ரேயாஸ் ஐயர்.. இந்தியா - இங்கிலாந்து போட்டியில் என்ன நடந்தது?

கார்டிஃப்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கார்டிஃபில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியின் போது வார்த்தை மோதல் சம்பவம் நடைபெற்றது. இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன் இடையே மைதானத்தில் ஏற்பட்ட வார்த்தை மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்திய அணி பேட்டிங் செய்த போது, சாம் கர்ரன் வீசிய பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் தடுத்து ஆடினார். அதன் பிறகு சாம் கர்ரன் தேவையின்றி பந்தை எடுத்து ஸ்ரேயாஸ் ஐயரை நோக்கி எறிய முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர், சாம் கர்ரனைப் பார்த்து காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

Shreyas Iyer involved in heated exchange with Sam Curran in 2nd ODI Against England

இரு வீரர்களும் மைதானத்தின் நடுவே ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமான வார்த்தைகளால் பேசிக் கொண்டதால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நடுவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர். இந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

முந்தைய போட்டியில் சொதப்பிய ஸ்ரேயாஸ் ஐயர், நேற்று பொறுப்புடன் விளையாடி 71 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 66 ரன்கள் குவித்து அசத்தினார். விராட் கோலியுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மீட்டெடுத்தார். விராட் கோலி 65 ரன்கள் சேர்த்தார்.

ஆனால், இவர்களின் கூட்டணிக்குப் பிறகு இந்திய அணி படுமோசமான சரிவைச் சந்தித்தது. 178 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவாக இருந்த இந்தியா, ஜோப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் சிக்கி 193 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது.

ஆர்ச்சர் வீசிய ஓவரில் அக்சர் படேல் 1 ரன் எடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே சிவம் துபே ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதன் காரணமாக இந்திய அணி 44 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் கஸ் அட்கின்சன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

விடைபெறும் ரோஹித் சர்மா? முன்பே சொன்ன பிசிசிஐ.. இதுதான் கடைசி சர்வதேச போட்டி.. சோகத்தில் ரசிகர்கள்

விடைபெறும் ரோஹித் சர்மா? முன்பே சொன்ன பிசிசிஐ.. இதுதான் கடைசி சர்வதேச போட்டி.. சோகத்தில் ரசிகர்கள்

அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 44.1 ஓவரில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அனுபவ வீரர் ஜோ ரூட் நிதான ஆட்டம் ஆடி 99 ரன்கள் எடுத்து இந்திய அணியை வீழ்த்தினார்.

IND vs ENG: நங்கூரம் போட்டு 99 ரன் எடுத்து.. இந்திய அணியை வீழ்த்திய ஜோ ரூட்.. இங்கிலாந்து வெற்றி

IND vs ENG: நங்கூரம் போட்டு 99 ரன் எடுத்து.. இந்திய அணியை வீழ்த்திய ஜோ ரூட்.. இங்கிலாந்து வெற்றி
Story first published: Friday, July 17, 2026, 7:13 [IST]
Other articles published on Jul 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+