For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்ரேயஸ் vs ரிஷப் பண்ட்.. டெல்லி அணியில் நீடித்த கேப்டன்சி சண்டை.. முற்றுப்புள்ளி வைத்தார் அதிகாரி!

டெல்லி: ஐபிஎல் தொடரில் டெல்லி அணி கேப்டன் பதவிக்கு ரிஷப் பண்ட் - ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வந்த சூழலில் அது குறித்து புதிய தகவல் கசிந்துள்ளது.

டெல்லி அணியை கடந்த 2 வருடங்களாக சிறப்பான முறையில் வழிநடத்தி வந்தவர் ஸ்ரேயாஸ் ஐயர். கடந்த மார்ச் 23ம் தேதி நடைபெற்ற இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் போட்டியில் இடதுகையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தோள்பட்டை எலும்பு இடம் மாறியுள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருந்தது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். ஏனென்றால் காயம் சரியாக 3 - 4 மாதங்கள் ஆகும் என்று அப்போது கூறப்படுகிறது.

முதல் போட்டி

முதல் போட்டி

ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தால் பாதிக்கப்பட்டதால், டெல்லி அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார். அணியில் அஸ்வின், ஸ்மித் என பல அனுபவ வீரர்கள் உள்ள போதும் ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இளம் வீரர் என்றாலும், சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றுக்கொடுத்து அசத்தினார். இவரின் கேப்டன்சியை பார்த்த கிரிக்கெட் வல்லுநர்கள், இந்திய அணியை வழிநடத்தவே தகுதியுள்ளது எனக்கூறினர்.

ரிஷப் பண்ட்-க்கு சிக்கல்

ரிஷப் பண்ட்-க்கு சிக்கல்

ஆனால் தற்போது ரிஷப் பண்ட்-ன் கேப்டன்சி பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைப் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் பெங்களூருவில் உள்ள தேசிய அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார். சமீபத்தில் நடைபெற்ற இலங்கை தொடருக்கான கேப்டனாகவே ஸ்ரேயாஸ் ஐயர் தான் நியமிக்கப்படவிருந்தது. ஆனால் அவர் முழு உடற்தகுதி பெறாததால் அந்த வாய்ப்பு தள்ளிப்போனது.

மீண்டும் அணியில்

மீண்டும் அணியில்

ஆனால் தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் பூரண குணமடைந்து முழு உடற்தகுதியுடன் உள்ளார். இதற்காக தேசிய அகாடமியில் இருந்து சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரின் 2 வது பாதியில் ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் கேப்டன் பதவி அவரிடமே கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டு வருகிறது.

கசிந்த தகவல்

கசிந்த தகவல்

இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன்சி சண்டைக்கு, அணி நிர்வாகத்தில் இருந்து புதிய தகவல் கசிந்துள்ளது. ஐபிஎல் தொடரின் 2வது பாதியிலும் ரிஷப் பண்ட் தான் கேப்டனாக தொடர்வார் என்று டெல்லி அணி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொடரை டெல்லி அணி சிறப்பாக துவங்கியுள்ளதால் கேப்டன் மாற்றம் இப்போது அவசியம் இல்லை என்றும் ஆலோசனைக்கூட்டத்தில் டெல்லி அணி நிர்வாகிகள் யோசித்து வருவதாக தெரிகிறது.

டெல்லி அணி

டெல்லி அணி

ஐபிஎல் தொடரின் 2வது பாதி செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. அதில் மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் முதாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. டெல்லி அணி வரும் செப்டம்பர் 22ம் தேதி தனது முதல் ஆட்டமாக ஐதராபாத் அணியுடன் மோதவிருக்கிறது. இந்த அணி தற்போது வரை 8 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

Story first published: Tuesday, August 31, 2021, 18:42 [IST]
Other articles published on Aug 31, 2021
English summary
Shreyas Iyer is in Full fitness, Ready for IPL in UAE, who will be the next captain for DC in IPL 2nd leg
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+