
இந்திய அணி வெற்றி
இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் ஸ்ரேயாஸின் சதம் என கூறலாம். இந்திய அணியின் ஓப்பனிங் வீரர்கள் ஷிகர் தவான் 13 ரன்கள் மட்டும் சுப்மன் கில் 28 ரன்களை மட்டுமெ எடுத்து வெளியேறினர். பரிதாப நிலையில் இருந்த இந்திய அணியை இஷான் கிஷான் - ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடிதான் காப்பாற்றினர். 2வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இவர்கள் 167 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் 48/ 2 என இருந்த ஸ்கோர் 209/3 என மாறியது.

ஸ்ரேயாஸ் ஐயர் சதம்
சிறப்பாக விளையாடிய இஷான் கிஷான் 84 பந்துகளில் 93 ரன்கள் அடித்த போதும் சதத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை. எனினும் மறுமுணையில் தூணாக நிலைத்து நின்ற ஸ்ரேயாஸ் ஐயர் 111 பந்துகளில் 113 ரன்களை விளாசினார். இதில் 15 பவுண்டரிகளும் அடங்கும். 2022ம் ஆண்டில் இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ஸ்ரேயாஸ் 458 ரன்களை குவித்து 57 ரன்கள் சராசரி வைத்துள்ளார். இதனால் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

சாதனை பட்டியல்
இந்நிலையில் இந்த சதம் மூலம் முக்கிய சாதனையை அவர் படைத்துள்ளார். அதாவது எத்தனை சிறப்பான பேட்டர்கள் உள்ள போதும், ராஞ்சி மைதானத்தில் சதமடிப்பது எளிதல்ல. அந்தவகையில் இங்கு சதமடித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் விராட் கோலி ஒரே ஒருவர் தான் சதமடித்திருந்தார்.

ஸ்கோர் விவரம்
2013ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 139 ரன்களும், 2019ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 139 ரன்களையும் விராட் கோலி அடித்திருந்தார். அயல்நாடுகளில் இருந்தும் இரண்டு வீரர்கள் இங்கு சதமடித்துள்ளனர். இலங்கையின் மேத்யூவ்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா ஆகியோர் சதமடித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications