Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்ப போறாரு... செப்டம்பர்ல தான் திரும்பி வருவாராம்... சீக்கிரமாக திரும்பி வாங்க ப்ரோ!

டெல்லி : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.

காயம் பலமாக இருக்கும் நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர், ஐபிஎல் தொடர் முழுமைக்கும் விளையாட மாட்டார் என்றும் டி20 உலக கோப்பைக்கு முன்னதாக வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து டி20 தொடர்களில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம்

ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி கடந்த 23ம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் பீல்டிங் செய்த ஷ்ரேயாஸ் ஐயர், பவுண்டரிக்கு செல்லவிருந்த ஒரு பந்தை தடுக்க முயன்றபோது தடுமாறி கீழே விழுந்து தோள்பட்டையில் காயம் அடைந்தார்.

மாற்றுவீரர் சூர்யகுமார்

மாற்றுவீரர் சூர்யகுமார்

இதையடுத்து அவர் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் விளையாடினார். இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் பலமாக உள்ள நிலையில் அவர் அடுத்ததாக ஒருநாள் தொடர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சூர்யகுமார் ஆட்டம்

சூர்யகுமார் ஆட்டம்

இந்நிலையில் அவருக்கு பதிலாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ் விளையாடவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடது தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டம்

ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டம்

இதையடுத்து ஷ்ரேயாஸ் ஐயர், டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்தியாவில் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து டி20 தொடர்களில் பங்கேற்பார் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Story first published: Thursday, March 25, 2021, 19:10 [IST]
Other articles published on Mar 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+