மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரர்களில் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து வரும் ஸ்ரேயாஸ் தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மூன்று அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்று ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த கேப்டன் என்று பெருமையை ஸ்ரேயாஸ் படைத்திருந்தார்.
அது மட்டும் இல்லாமல் தொடர்ந்து ஐந்து இறுதி போட்டிகளில் வெற்றியை பெற்றிருந்தார். இப்படி இருக்க ஸ்ரேயாஸ், கடந்த வாரம் நடைபெற்ற ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியை தலைமை தாங்கிய ஸ்ரேயாஸ் தோல்வியை தழுவினார்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடன் மும்பையை மையமாக வைத்து டி20 தொடர் ஒன்று நடைபெற்றது. இதில் ஸ்ரேயாஸ் மும்பை பால்கன்ஸ் என்ற அணியை வழி நடத்தினார். இந்த தொடரில் சூரியகுமார், பிரித்விஷா போன்ற ஸ்டார் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த தருணத்தில் தனது அணியை சிறப்பாக வழி நடத்தி மீண்டும் இறுதிப் போட்டிக்கு ஸ்ரேயாஸ் அழைத்துச் சென்றார். இந்த இறுதிப் போட்டியில் மும்பை சவுத் மராத்தா ராயல்ஸ் என்ற அணியுடன் ஸ்ரேயாஸ் ஐயரின் பால்கான்ஸ் அணி பலப்பரிட்சை நடத்தியது. இது ஸ்ரேயாஸ் தலைமையிலான அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் ஸ்ரேயாஸ் 17 பந்துகளை எதிர் கொண்டு 12 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
இதனால் மரத்தா ராயல்ஸ் அணி நான்கு பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி இலக்கை 5 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றியை பெற்றது தொடர்ந்து இரண்டாவது பைனலை இழந்து இருக்கிறார். ரஞ்சி கோப்பை, இராணி கோப்பை, ஐபிஎல் 2024, சையது முஸ்தாக் அலி, வீரராக சாம்பியன்ஸ் டிராபி என தொடர்ந்து ஐந்து இறுதிப் போட்டியை ஸ்ரேயாஸ் வென்ற நிலையில் தற்போது இந்த சரிவு ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரேயாஸ், தோல்விக்கு இதுதான் காரணம் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. ஆனால் எங்கள் அணி வீரர்கள் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டனர். நாங்கள் இறுதி போட்டிக்கான இந்த பயணத்தில் ஒரு போட்டியில் மட்டும் தான் தோல்வியை தழுவினோம். இறுதிப் போட்டியில் நான் முதுகில் குத்தப்பட்டு விட்டேன். இதில் நான் நிச்சயம் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
இந்த தோல்வி வீரர்களுக்கு காயத்தை ஏற்படுத்தலாம். ஆனால் நிச்சயம் மீண்டும் அவர்கள் திரும்பி வருவார்கள் என்று நம்புகிறேன். இது நல்ல அனுபவத்தை கொடுத்து இருக்கும் என்று ஸ்ரேயாஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் இவ்வாறு யாரை விமர்சித்தார், எதற்கு என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.